இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை பங்குனி – 9 | Today rasi palan

அனைவரும் இன்று வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நன்று… இன்று நாம் ஒற்றுமையுடன் கொரோனாவை ஒழிப்போம்…..

விகாரி வருடம் : பங்குனி மாதம் :
09 ஆம் தேதி !

மார்ச் மாதம் : 22 ஆம் தேதி !
(22-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-20 மணி அளவில் !
(மீன லக்கனம்)

இன்றைய திதி : தேய்பிறை :
சதுர்த்தசி !!

திரயோதசி..
காலை 11-36 மணி வரை ! அதன் பிறகு சதுர்த்தசி !!

இன்றைய நட்சத்திரம் :
சதயம் !

சதயம்
இரவு 11-36 மணி வரை அதன் பிறகு பூரட்டாதி !!

யோகம் :
சித்தயோகம் !

ராகுகாலம் :
மாலை : 04-30 மணி முதல் 06-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

குளிகை :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !

இன்றும்
மேல் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்றும்
கடக சந்திராஷ்டமம் !

நல்ல நேரம் :

காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!
10-30 மணி முதல் 11-30 மணி வரை !!

மாலை : 03-30 மணி முதல் 04-30 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

சுக்கிர ஓரை :
காலை : 10-30 மணி முதல் 11-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
மாத சிவராத்திரி !!

இன்று
சுப முகூர்த்த தினம் !!

இன்று
தண்டியடிகள் நாயனார் குரு பூஜை !!

*ஆஞ்சநேயர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

 

இன்றைய (22-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் உள்ளவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.
—————————————
ரிஷபம்

குடும்ப பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
—————————————
மிதுனம்

மனதில் புதுவிதமான எண்ணங்களால் சஞ்சலமான சூழல் உண்டாகும். செயல்பாடுகள் மற்றும் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
கடகம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த பணிகளால் அலைச்சல்கள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : புரிதல் ஏற்படும்.

ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————
சிம்மம்

மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் இலாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : அனுகூலம் உண்டாகும்.

பூரம் : வாய்ப்புகள் ஏற்படும்.

உத்திரம் : சாதகமான நாள்.
—————————————
கன்னி

சுயதொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
—————————————
துலாம்

வெளிநாடு தொடர்பான பணி வாய்ப்புகள் முன்னேற்றமான சூழ்நிலையை உண்டாக்கும். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதரவான பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : முன்னேற்றமான நாள்.

சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
விருச்சகம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான தகுந்த வாய்ப்புகள் அமையும். வாகனங்களின் மூலம் இலாபம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அனுஷம் : இலாபம் கிடைக்கும்.

கேட்டை : கவனம் வேண்டும்.
—————————————
தனுசு

வர்த்தகம் தொடர்பான தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காது தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
—————————————
மகரம்

உத்தியோகத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். திறமைகேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : உயர்வு உண்டாகும்.
—————————————
கும்பம்

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : வாதத்தை தவிர்க்கவும்.
—————————————
மீனம்

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.

ரேவதி : மாற்றமான நாள்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!