இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.9.2019 செவ்வாய்க்கிழமை புரட்டாசி – 7 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி – 07*
*செப்டம்பர் – 24 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*க்ருஷ்ண*
*தசமி ( 15.15 ) ( 12:08pm )*
&
*ஏகாதசி*
*பௌம*
*புனர்பூசம் ( 2.15 ) ( 06:56am )*
&
*பூசம் ( 56.53 )*
*பரிக யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*_

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு செப்டம்பர் 23 ந்தேதி நடு இரவு 01:08 மணி முதல் செப்டம்பர் 25 ந்தேதி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:12pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:56am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

*இன்றைய ராசிபலன் 24.09.2019 செவ்வாய்க்கிழமை.!!*_

மேஷம்

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்து முடிப்பீர்கள். எதிர்பார்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். விருந்தினர்
களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில்வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள்.அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவுப்பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதுசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: இன்றைய தினம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம்சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

மீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்..

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!