இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.2.2020 செவ்வாய்க்கிழமை மாசி – 13 | Today rasi palan

 

🕉 ஶிவ Shiva 🕉 🕉 ராமRaama 🕉

*செவ்வாய் / Tuesday*
*{25 – February – 2020}*
*மாஶி 13/ MAASHI 13*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*ஶிஶிர ருது / Shishira R’thu*

*கும்ப மாஸம் /*
*Kumbha Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*த்விதீயை* / *Dhwitheeyai*~
Up to 01:22 Am (26/02/2020) வரை
பின் *த்ருதீயை* /Then *Thr’theeyai*

*பௌம வாஸரம்/Bouma Vaasaram*

*பூரட்டாதி* / *Poorattaathi* ~
(பூர்வபத்ரா/ Poorva bhadhraa)
Up to 07:02 Pm வரை
பின் *உத்ரட்டாதி* / Then *Uthrattaathi*

_யோகம்/ Yogam_
*ஸித்தம்* / *Sidhdham*
Up to 08:47 Am வரை
பின் *ஸாத்யம்* /Then *Saadhyam*

_கரணம் /Karanam_
*பாலவம்* / *Baalavam*
Up to 00:20 Pm வரை
பின் *கௌலவம்* /Then *Koulavam*

_ஶ்ராத்த திதி_
*கும்ப ஶுக்ல த்விதீயை*

_Shraaddha thithi_
*Kumbha Shukla Dhwitheeyai*

அம்ருதாதி யோகம் ~
*நாஶம் & ஸித்தம்*

Amr’thaadhi Yogam ~
*Naasham & Sidhdham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:37 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:20 Pm*

*நல்ல நேரம்/Favour: time*
07:30 ~ 08:30 Am &
04:30 ~ 05:30 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
03:00 ~ 04:30 Pm

எம கண்டம்/Yema Ghantam
09:00 ~ 10:30 Am

குளிகை காலம் / Gulikai Kaalam
12:00 ~ 01:30 Pm

வார ஶூலை /பரிஹாரம் ~
*வடக்கு /பால்*

Vaara Shoolai /Remedy ~
*North / Milk*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*ஸிம்ஹம்* / *Simham*

இன்று ~
*சந்த்ர தர்ஶனம்*
Today ~
*Chandhra Dharshan*

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். புதியபாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களைப் பற்றி குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்லை மீறி செயல்பட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

Leave a Comment