இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆவணி – 08 | Today rasi palan

*🕉ஶ்ரீராமஜெயம்🕉*.

*பஞ்சாங்கம் ~ ஆவணி* ~ *08* ~
*{25.08.2019}*~ *ஞாயிற்றுக்கிழமை*.
*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ தக்ஷிணாயணம் .
*ருது*~ வர்ஷ ருதௌ.
*மாதம்*~ ஆவணி ( சிம்ம மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி* ~ *தசமி.*
*ஸ்ரார்த்த திதி ~ தசமி.*
*நாள்* ~~ ஞாயிற்றுக்கிழமை {பாநு வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம் ~ மிருகஸீர்ஷம்.*
*யோகம் ~ சித்த யோகம்.*
*கரணம்*~ வணிஜை, பத்ரம்.
*நல்ல நேரம்*~ காலை 08.15 AM ~ 09.00 AM & 03.15 PM ~ 04.15 PM.
*ராகு காலம்*~ மாலை 4.30 pm~ 06.00 pm .
*எமகண்டம்*~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM.
*குளிகை*~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.
*சூரிய உதயம்*~ காலை 06.04 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.21. PM.
*சந்திராஷ்டமம்*~அனுஷம், கேட்டை .
*சூலம்*~ மேற்கு .
*பரிகாரம்*~ வெல்லம்.
*இன்று*~ **🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAAANGAM*~
*AAVANI*~ *08* ~ *(25.08.2019)* ~ SUNDAY.
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM }
*AYANAM* ~ DHAKSHINAAYANAM.
*RUTHU*~ VARSHA RUTHU.
*MONTH*~ AAVANI (SIMHA MAASAM}
*PAKSHAM* ~ KRISHNA PAKSHAM.
*THITHI ~ DHASAMI.*
*SRAARTHATHITHI.~ DHASAMI.*
*DAY*~ SUNDAY( BHANU VAASARAM).
*NAKSHATHRM:~ MIRUGASEERSHAM.*
*YOGAM ~ SIDHDHA YOGAM.*
*KARANAM ~ VANIJAI, BHADHRAM.*
*RAGU KALAM*. ~ 04.30 ~ 06.00 PM.
*YEMAGANDAM*~12.00 ~ 01.30 PM.
*KULIGAI*~ 03.00 ~ 04.30 PM .
*GOOD TIME*~ 08.15 AM TO 09.00 AM & 03.15. PM ~ 04.15 PM .
*SUN RISE* ~ 06.04 AM.
*SUN SET ~ 06.21 PM*
*CHANDRAASHTAMAM* ~ ANUSHAM,KETTAI.
*SOOLAM* ~ WEST .
*Parigaram* ~ JAGGERY.~~~~~~~ *TODAY~*. 🙏🙏

மேஷம்

மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக்  கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: காலை 11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

மிதுனம்

மிதுனம்: காலை 11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கடகம்

கடகம்: வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராதவைகள் நிகழும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கன்னி

கன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

துலாம்

துலாம்:  காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் குழப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்:  காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும்.

தனுசு

தனுசு: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள்.

மகரம்

மகரம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள் விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.  திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!