இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 26.08.2019 திங்கட்கிழமை ஆவணி – 09 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*பஞ்சாங்கம் ~ *ஆவணி* ~ *09*
*{26.08.2019} திங்கட்கிழமை*.
*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ தக்ஷிணாயணம் .
*ருது*~ வர்ஷ ருதௌ.
*மாதம்*~ ஆவணி ( சிம்ஹ மாஸம்)
*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*திதி ~ ஏகாதசி*
*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.*
*நாள்* ~~ திங்கட்கிழமை {இந்து வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம் ~ திருவாதிரை*.
*யோகம்*~ சித்த,அமிர்த யோகம்.
*கரணம் ~பவம், பாலவம்.*
*நல்ல நேரம்*~ காலை 06.15 AM ~ 07.15 AM & 04.45~ 05.45 PM.
*ராகு காலம்*~ காலை 07.30 AM ~ 09.00.AM.
*எமகண்டம்*~ காலை 10.30 ~12.00 PM.
*குளிகை*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
*சூரிய உதயம்*~ காலை 06.04 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.20 PM.
*சந்திராஷ்டமம்*~ கேட்டை, மூலம்.
*சூலம்*~ கிழக்கு.
*பரிகாரம்*~ தயிர் .
*இன்று — ஏகாதசி விரதம்*. 🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🕉🔯*

*PANCHCHAANGAM*~
*AAVANI ~ 09 ~ (26.08.2019) MONDAY*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM* ~ DHAKSHINAAYANAM.
*RUTHU*~ VARSHA RUTHU .
*MONTH*~ AAVANI { SIMHA MAASAM}
*PAKSHAM* ~ KRISHNA PAKSHAM.
*THITHI*~ *EKADHASI*
*SRAARTHTHA THITHI ~ EKADHASI.*
*DAY*~MONDAY ( INDHU VAASARAM)
*NAKSHATHRAM ~ THIRUVAADHIRAI.*
*YOGAM* ~ SIDHDHA, AMIRDHA YOGAM.
*KARANAM~ BHAVAM BAALAVAM.*
*RAGU KALAM*.~:07.30 ~09.00 AM.
*YEMAGANDAM* ~ 10.30 ~12.00 PM.
*KULIGAI* :~ 01.30 ~ 03.00 ~ PM .
*GOOD TIME*~ 06.15 AM TO 07.15 AM & 04.45 PM ~ 05.45 PM .
*SUN RISE* ~ 06.04 AM.
*SUN SET~ 06.20 PM*
*CHANTHRASHTAMAM ~ KETTAI,MOOLAM*.
*SOOLAM* ~ EAST.
*Parigaram*~*CURD* .
*TODAY ~ EKADHASI UPAVAS*
🙏🙏🙏🙏

மேஷம்

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

கன்னி

கன்னி: உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

தனுசு

தனுசு: மனைவிவழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்
கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்

மகரம்: வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

கும்பம்

கும்பம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!