இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.11.2019 புதன்கிழமை கார்த்திகை – 11 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉 ராம Raama 🕉

*புதன் / Wednesday*
*{27 – November – 2019}*
*கார்த்திகை 11/ Kaarthikai 11*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*தக்ஷிணாயனம் /Dhakshinaayanam*

*ஶரத் றுது / Sharath R’thu*

*வ்ருஸ்ச்சிக மாஸம் /*
*Vr’schika Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*ப்ரதமை* / *Prathamai* ~
Up to 08:37 Pm வரை
பின் *த்விதீயை* /Then *Dhwitheeyai*

*ஸௌம்ய வாஸரம்* /
*Soumya vaasaram*

*அனுஷம்* / *Anusham* ~
(அனுராதா /Anuraadhaa)
Up to 09:58 Pm வரை
பின் *கேட்டை* / Then *Kettai*
(ஜ்யேஷ்டா /Jyeshtaa)

_யோகம் /Yogam_
*ஸுகர்மம்* / *Sukarmam*
Up to 09:45 Pm வரை
பின் *த்றுதி* /Then *Dhr’thi*

_கரணம் /Karanam_
*கிம்ஸ்துக்னம்* / *Kimsdhughnam*
Up to 09:08 Am வரை
பின் *பவம்* /Then *Bavam*

_ஶ்ராத்த திதி_
*வ்ருஸ்ச்சிக ஶுக்ல ப்ரதமை*

_Shraaddha thithi_
*Vr’schika Shukla Prathamai*

அம்ருதாதி யோகம் ~
*ஸித்தம் & ஶுபம்*

Amr’thaadhi Yogam ~
*Sidhdham & Shubham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:20 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 05:44 Pm*

நல்ல நேரம்/Favour: time
09:15 – 10:15 Am &
05:15 – 06:00 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
12:00 – 01:30 Pm

எம கண்டம்/Yema Ghantam
07:30 – 09:00 Am

குளிகை காலம் /Gulikai Kaalam
10:30 – 12:00 Am

வார ஶூலை/ பரிஹாரம் ~
*வடக்கு / பால்*

Vaara Shoolai /Remedy ~
*North /Milk*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*மேஷம்* / *Mesham*

இன்று ~
**
**

Today ~
**
**

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறைகூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும் வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும்; எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பிமூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார். அமைதியான நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும், சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடை யும் அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். நினைத் தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பார்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில்  சில நோக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தைரியமான சில முடிவுகளை எடுக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தள்ளி போன விஷயங்கள் உடனேமுடியும். விசேஷங்களை முன் னின்று  நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரி மையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், விமர்சனங்களுக்கும் கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத் தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்

தனுசு

தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து  முடிக்க வேண்டி  வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வாகனத்தால் தொந்தரவுகள் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தி யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளைத்தாண்டி  முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கி யவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்த னைத்திறன் பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். உங்களுடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப்பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக் காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கணவன் மனைவிக்குள் அன்னிேயான்யம் பிறக்கும்.  வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!