இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.2.2020 வியாழக்கிழமை மாசி – 15 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉 ராம Raama🕉

*வியாழன் / Thursday*
*{27 – February – 2020}*
*மாஶி 15/ MAASHI 15*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*ஶிஶிர ருது / Shishira R’thu*

*கும்ப மாஸம் /*
*Kumbha Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*சதுர்த்தி*/ *Chathurthi* ~
Up to 05:24 Am (28/02/2020) வரை
பின் *பஞ்சமி* / Then *Panchami*

*குரு வாஸரம் /Guru Vaasaram*

*ரேவதி* / *Revathi* ~
(ரேவதீ /Revathee)
Up to 00:03 Am (28/02/2020) வரை
பின் *அஶ்வதி* /Then *Ashwathi*
(அஶ்வினீ /Ashwinee)

_யோகம்/Yogam_
*ஶுபம்* / *Shubham*
Up to 09:45 Am வரை
பின் *ஶுப்ரம்* /Then *Shubhram*

_கரணம்/Karanam_
*வணிஜை* / *Vanijai*
Up to 04:25 Pm வரை
பின் *பத்ரை* /Then *Bhadhrai*

_ஶ்ராத்த திதி_
*கும்ப ஶுக்ல சதுர்த்தி*

_Shraaddha thithi_
*Kumbha Shukla Chathurthi*

அம்ருதாதி யோகம் ~
*ஶுபம் & அம்ருதம்*

Amr’thaadhi yogam ~
*Shubham & Amr’tham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:35 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:20 Pm*

*நல்ல நேரம் /Favour: time*
00:30 – 01:30 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
01:30 – 03:00 Pm

எம கண்டம்/Yema Ghantam
06:00 – 07:30 Am

குளிகை காலம் /Gulikai Kaalam
09:00 – 10:30 Am

வார ஶூலை/பரிஹாரம் ~
*தெற்கு / நல்லெண்ணெய்*

Vaara Shoolai /Remedy ~
*South / Sesame Oil*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*ஸிம்ஹம் /Simham*

இன்று ~
*சதுர்த்தி வ்ரதம்*
*கரி நாள்*

Today ~
*Chathurthi Vratham*
*Kari Naal*
🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

மேஷம்: குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தி யோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்கநினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத் தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உணவு பழக்கத்தில் கொஞ்சம்கவனம் தேவை. உத்தி யோகத்தில் அதிகாரி களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் தாமதமாகும் நாள்.

கன்னி

கன்னி: பிள்ளைகள் உங்கள் அரு மையை புரிந்து கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தி
யோகத்தில் உயர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழிஉறவினர்களுடன் மனஸ்தா பங்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தை புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு அதிகரிக்கும். யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தி யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!