இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.5.2020 புதன்கிழமை வைகாசி – 14 | Today rasi palan

இன்றைய ராசிபலன்

*🕉🔯ஶ்ரீராமஜெயம்.🔯🕉*

*பஞ்சாங்கம்* ~ *வைகாசி*
~ *14* ~*{27.05.2020.}* *புதன்கிழமை*.

*1.வருடம் ~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம்.*
*3.ருது ~ வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்).*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ பஞ்சமி .* *ஸ்ரார்த்த திதி ~ பஞ்சமி .*
*7.நாள் ~~ புதன்கிழமை .{ ஸௌம்யவாஸரம்} ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ புனர்பூசம் காலை 06.17 AM. வரை. பிறகு பூசம் .*

*யோகம் ~ சித்த யோகம் .*
*கரணம் ~ பவம் , பாலவம் .*
*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM . & 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM .*
*எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.*
*குளிகை ~ 10.30 AM ~ 12.00 NOON.*
*சூரிய உதயம். ~ காலை 05.52. AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.27 PM.*
*சந்திராஷ்ட்டமம் ~ மூலம் .*
*சூலம் ~ வடக்கு.*
*பரிகாரம் ~ பால்*.
*இன்று ~ .*🙏🙏

*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*
*VAIKAASI ~ 14* ~
*(27.05.2020)* *WEDNESDAY*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}.*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM. 3.RUTHU ~ VASANTHA RUTHU.*
*4.MONTTH ~ VAIKAASI (RISHABHA MAASAM}*
*5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*6.THITHI~ PANCHAMI. *SRAARTHTHA THITHI.~ PANCHAMI*
*7.DAY ~ WEDNESDAY( SOWMYA VAASARAM).*
*8.NAKSHATHRAM ~ PUNARPOOSAM UPTO 06.17 AM. AFTERWARDS POOSAM.*.
*YOGAM ~ SIDHDHA YOGAM.*
*KARANAM ~ BHAVAM, BAALAVAM. RAGU KALAM ~ 12.00 PM~01.30PM.*
*YEMAGANDAM ~ 07.30 ~ 09.00 AM.*
*KULIGAI : ~ 10.30AM ~12.00 PM.*
*GOOD TIME ~ 09.30 AM TO 10.30 AM. & 04.30 PM ~ 05.30 PM.*
*SUN RISE ~ 05.52 AM.*
*SUN SET ~ 06.27 PM.* *CHANDRAASHTAMAM ~ MOOLAM.*
*SOOLAM ~ NORTH.*
*PARIGARAM*~ *MILK*~~~~~~~ . *TODAY ~ .*🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*ஹோரை புதன்கிழமை*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

காலை 🔔🔔

6-7.புதன். 💚 👈சுபம் ✅
7-8.சந்திரன்.💚👈சுபம் ✅
8-9. சனி.. ❤👈அசுபம் ❌
9-10.குரு. 💚 👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
1-2. புதன். 💚 👈சுபம் ✅
2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
3-4. சனி.. ❤👈அசுபம் ❌
4-5. குரு. 💚 👈சுபம் ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வீட்டிற்கு தேவையான பொருட்களை முக்கியமான சில பொருட்களை இன்றைய தினம் வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். வாகனத்தில் செல்லும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்றைய தினம் முடிந்தவரை யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலக பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து பேசுவது மிகவும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் கையிலிருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது உங்களுடைய சாமர்த்தியம். அனாவசிய பேச்சு குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் ஆரோக்கியம் தேவை. நிதானத்தைக் கடைப்பிடித்தால் வரும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தன வரவு அதிகமாக வரப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத வருமானம் கூட உங்கள் கைக்கு வந்து சேரும். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானத்தை சிக்கனமாக செலவு செய்தால் பிற்காலத்தில் கஷ்டப்படாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகின்றது. என்ற ஒரு முடிவை எடுக்க வேண்டியதாக இருந்தாலும், நிதானத்தோடு சிந்தித்து முடிவெடுங்கள். அவசரம் வேண்டாம். நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களது நாளை தொடங்கினாலே போதும். மன உறுதிதான் உங்களுக்கு தேவை. அவ்வப்போது சில மன குழப்பங்கள் வந்தாலும் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நல்லது.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் அமையப்போகின்றது. யாரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். வம்பு சண்டை வந்தாலும், ஒதுங்கி போவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக இருந்தால், எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உங்களது உறவினர்களின் அருமை பெருமைகளைப் புரிந்து கொள்ளும் நாளாக அமையலாம். ஏனென்றால், உங்களுடைய பிரச்சினைக்கு செவி சாய்த்து, அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போவது உங்களது உறவினர்கள் தான். ஆகவே, எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. முன் கோபம் வேண்டாம். அலுவலகத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைத்துவிடும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்ட போகிறது என்றே சொல்லலாம். உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். அலுவலகத்தில் யாரையும் நம்பி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

விருச்சிகம் விருச்சக ராசியாளர்களுக்கு இன்று சந்தோஷத்தை தரும் நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் நல்ல முன்னேற்றத்தோடு செல்லும். வருமானம் சீராக இருக்கும். பிரச்சனைகளுக்கு வாய்ப்பில்லை.

தனுசு தனுசு ராசிக்காரர்கள் இன்று எந்தப் பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வம்பு சண்டை தேடி வந்தாலும், ஒதுங்கி சென்றுவிடுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. எதையோ இழந்தது போல் ஒரு மன குழப்பம் இருக்கும். அதுவும் சரியாகிவிடும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்தோஷமான தினமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் உங்களது மனது, எதையும் ஏற்றுக்கொள்ளாது. ஏதோ ஒரு பயம் உள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், பிரச்சனை என்று எதுவும் இல்லை. எந்த ஒரு வேலையாக இருந்தாலும், தைரியத்தோடு தொடங்கினால் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்துங்கள்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான சுமைகளை சுமக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகரிக்கத்தான் செய்யும். சொந்தத் தொழிலில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். ஆனால், முயற்சி செய்து வெற்றியடையும் திறமை உங்களிடம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். பொறுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு.

மீனம் மீன ராசியாளர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தான் அமையப்போகின்றது. புதிய முயற்சிகள் எடுக்கலாம். நிச்சயம் வெற்றி அடையும். அலுவலகப் பணியில் நீங்கள் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. அது நிச்சயம் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் வகையில் தான் அமையும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டு மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்…

Leave a Comment