இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.07.2019 சனிக்கிழமை ஆடி 11 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 11*
*ஜூலை – 27 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*தசமி ( 26.2 ) ( 04:27pm )*
&
*ஏகாதசி*
*ஸ்திர*
*கார்த்திகை ( 27.25 ) ( 04:53pm )*
&
*ரோஹிணி*
*கண்ட யோகம் ( 0.16 ) ( 06:05am )*
&
*வ்ருத்தி யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு ஜூலை 26 ந்தேதி இரவு 10:32 மணி முதல் ஜூலை 28 ந்தேதி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:05am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:17am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – வாஸ்து*_
&
_*ஆடி க்ருத்திகை*_

_*வாஸ்து நல்ல நேரம்*_
_*07:42am to 08:18am*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

இன்றைய ராசிபலன்

மேஷம்: தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம் பெருகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.

ரிஷபம்: தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் சற்று அதிகரிப்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.

கடகம்: கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி: இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தடைப்படும்.

விருச்சிகம்: வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு: சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

மகரம்: வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்: எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்: சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!