இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி 12 | Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 12*
*ஜூலை – 28 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*ஏகாதசி ( 24.28 ) ( 03:41pm )*
&
*த்வாதசி*
*பானு*
*ரோஹிணி ( 27.38 ) ( 04:53pm )*
&
*மிருகசீரிஷம்*
*த்ருவ யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு ஜூலை 26 ந்தேதி இரவு 10:32 மணி முதல் ஜூலை 28 ந்தேதி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:05am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:53am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

இன்றைய ராசிபலன்
7/28/2019
இன்றைய ராசிபலன்
மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் அலைக்கழிக்கப் படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட் டாரத்தில் செல்வாக்குக் கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர் களால் பயனடைவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்

கன்னி

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலி ருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங் கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்
தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய சொந்தம் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத் துவீர்கள். ஆடம்பரச் செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!