இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை மார்கழி – 13 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 13*
*டிசம்பர் – 29 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*ஸுக்ல*
*த்ருதீயை ( 16.2 ) ( 12:59am )*
&
*சதுர்த்தி*
*பானு*
*திருவோணம் ( 37.24 ) ( 09:23pm )*
&
*அவிட்டம்*
*ஹர்ஷண யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*_

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு டிசம்பர் 27 ந்தேதி நடு இரவு 12:23 மணி முதல் டிசம்பர் 30 ந்தேதி காலை 10:01 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:35am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:55pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:23am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸ்ரவண விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸித்த யோகம் – ஸுப யோகம்*_

 

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு தக்க பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்றுவருவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் .வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிய வேண்டி இருக்கும். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம்ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்க ளைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். யாருக்காகவும் முன்ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளாக சந்திக்கவேண்டும் நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!