இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 29.07.2019 திங்கட்கிழமை ஆடி 13 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 13*
*ஜூலை – 29 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*த்வாதசி ( 21.46 ) ( 02:29pm )*
&
*த்ரயோதசி*
*இந்து*
*மிருகசீரிஷம் ( 26.46 ) ( 04:29pm )*
&
*திருவாதிரை*
*வ்யாகாத யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*
&
*த்ரயோதசி*

_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_

_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._

_*விருச்சிக ராசி* க்கு ஜூலை 29 ந்தேதி அதிகாலை 04:53 மணி முதல் ஜூலை 31 ந்தேதி காலை 09:08 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:05am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:17am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – மஹா ப்ரதோஷம்*_
&
_*திதி த்வயம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_

இன்றைய ராசிபலன்

மேஷம்: பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்: சகோதரர்களால் நன்மை ஏற்படும். காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்: காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணலாபம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

துலாம்: பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு: இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

மீனம்: வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!