இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 30.1.2020 வியாழக்கிழமை தை – 16 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*தை – 16*
*ஜனவரி – 30 – ( 2020 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*ஸுக்ல*
*பஞ்சமி ( 13.53 ) ( 11:55am )*
&
*ஷஷ்டி*
*குரு*
*உத்திரட்டாதி ( 19.16 ) ( 02:19pm )*
&
*ரேவதி*
*ஸித்த யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஷஷ்டி*

_*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*_

_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._

_*சிம்ம ராசி* க்கு ஜனவரி 29 ந்தேதி அதிகாலை 04:30 மணி முதல் ஜனவரி 31 ந்தேதி மாலை 04:10 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:43am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:11pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:43pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

மேஷம்

மேஷம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கிடைக்கும் சந்தர்ப் பங்களை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து புகழ் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதிய உதவிகள் கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை பல மடங்கு விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பார்த்தவை ஒரு வேலை முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க போராடுகிறீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: தன்னிச்சையாகவும், தைரியமாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் தேவையற்ற சஞ்சலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்…

Leave a Comment