இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 30.03.2020 திங்கட்கிழமை பங்குனி – 17 | Today rasi palan

—————————-
*இன்றைய பஞ்சாங்கம்*
—————————-
பங்குனி 17 {30.03.2020} திங்கட்கிழமை
வருடம் ~விகாரி வருடம் {விகாரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~ஸிஸிர ருதௌ
மாதம் ~பங்குனி (மீன மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~ஷஷ்டி
ஸ்ராத்த திதி ~ஷஷ்டி
நாள் ~திங்கட்கிழமை {இந்து வாஸரம்}
நக்ஷத்திரம் ~ரோகிணி 2.10 PM வரை பிறகு மிருகஸீர்ஷம்
யோகம் ~அமிர்த யோகம்
கரணம் ~கௌலவம், தைதுலம்
நல்ல நேரம் ~6.00 AM ~7.00 AM & 4.30 PM ~5.30 PM
ராகு காலம் ~7.30 AM ~9.00 AM
எமகண்டம் ~10.30 AM ~12 Noon
குளிகை ~01.30 PM ~03.00 PM
சூரிய உதயம் ~06.14 AM
சூரிய அஸ்தமனம் ~06.17 PM
சந்திராஷ்டமம் ~விசாகம், அனுஷம்
சூலம் ~கிழக்கு
பரிகாரம் ~தயிர்
இன்று ~ஷஷ்டி விரதம்
—————————-
*இன்றைய ராசி பலன்கள்*
—————————-
மேஷம்

மனை சம்பந்தமான பிரச்சனைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பொன் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : ஆசைகள் நிறைவேறும்.

கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————-

ரிஷபம்

எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வீண் வாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.

ரோகிணி : வாதங்களை தவிர்க்கவும்.

மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
—————————-

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் காலதாமதமான பலன்கள் உண்டாகும். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் : திருப்திகரமான நாள்.
—————————-

கடகம்

மற்றவர்களுக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். இணையதளம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————-

சிம்மம்

குடும்ப பெரியோர்களிடம் அமைதி காக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : அமைதி வேண்டும்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
—————————-

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தொழில்வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

சித்திரை : தெளிவு பிறக்கும்.
—————————-

துலாம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எடுத்த செயலை முடிப்பதில் பல இடையூறுகள் ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : நிதானத்துடன் செல்லவும்.

விசாகம் : கவனம் வேண்டும்.
—————————-

விருச்சகம்

மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கை மற்றும் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : அனுகூலம் ஏற்படும்.
—————————-

தனுசு

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்புகள் கிடைக்கும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும். மனை சம்பந்தமான பேச்சுக்களில் அமைதி வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : விவாதங்கள் மறையும்.

பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் : அமைதி வேண்டும்.
—————————-

மகரம்

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகள் மூலம் சாதகமான பலன்கள் அமையும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
—————————-

கும்பம்

உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : நன்மை உண்டாகும்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
—————————-

மீனம்

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர் வாதங்களை தவிர்ப்பதன் மூலம் நற்பெயர் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : இலாபம் கிடைக்கும்.

ரேவதி : நற்பெயர் உண்டாகும்.

—————————- *இன்றைய குறள்*
—————————-குறள் எண்: 662 / பொருட்பால் / வினைத்திட்டம்
—————————-ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

இடையூறு வருமுன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டின் வழிப்பட்டதே வினைத் திட்பத்தை ஆராய்ந்து அறிந்த அமைச்சரின் கொள்கை என்று அரசியல் நூலார் கூறுவர்.

‘Each hindrance shun’, ‘unyielding onward press, If obstacle be there,’ These two define your way, so those that search out truth declare. Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.
—————————-*இன்றைய அழகு குறிப்புகள்*
—————————-
கால் ஆணி உள்ளவர்கள் இரவில் படுக்கும் பொழுது மஞ்சள் , மருதாணி இவ்விரண்டையும் நன்கு அரைத்து ஆணியுள்ள இடத்தில் துணியை கட்டி வரவும்!!

—————————-*இன்றைய பாட்டி வைத்தியம்*
—————————-நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

Leave a Comment