இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 30.08.2019 வெள்ளிக்கிழமை ஆவணி – 13 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆவணி – 13*
*ஆகஸ்ட் – 30 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ஹ*
*க்ருஷ்ண*
*அமாவாசை ( 26.47 ) ( 04:32pm )*
&
*ஸுக்ல*
*ப்ரதமை*
*ப்ருகு*
*மகம் ( 31.19 ) ( 06:32pm )*
&
*பூரம்*
*ஶிவ யோகம்*
*நாகவ கரணம்*
*ஸ்ராத்த திதி – அமாவாசை*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு ஆகஸ்ட் 29 ந்தேதி இரவு 08:07 மணி முதல் ஆகஸ்ட் 31 ந்தேதி இரவு 10:30 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:26pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:56am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – அமாவாசை*_
&
_*தர்ப்ப ஸங்க்ரஹம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – அமிர்த யோகம்*_

மேஷம்

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக  கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையு
ணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்:  உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோ
கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!