இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 30.9.2019 திங்கட்கிழமை புரட்டாசி – 13 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி – 13*
*செப்டம்பர் – 30 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*ஸுக்ல*
*த்விதீயை ( 35.55 ) ( 08:07pm )*
&
*த்ருதீயை*
*இந்து*
*சித்திரை ( 36.13 ) ( 08:31pm )*
&
*ஸ்வாதி*
*மாஹேந்திர யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்விதீயை*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு செப்டம்பர் 30 ந்தேதி காலை 09:09 மணி முதல் அக்டோபர் 02 ந்தேதி மதியம் 12:49 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:05pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:19am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – சந்திர தரிசனம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – அமிர்த யோகம்*_

மேஷம்

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும்.

மிதுனம்

மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக்
குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும்.

சிம்மம்

சிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.

கன்னி

கன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும்.

விருச்சிகம்

விருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

தனுசு

தனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடை வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல் படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

கும்பம்

கும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!