இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 31.10.2019 வியாழக்கிழமை ஐப்பசி – 14 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 14*
*அக்டோபர் – 31 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*சதுர்த்தி ( 57.33 )*
*குரு*
*கேட்டை ( 49.45 )*
*ஸோபன யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு அக்டோபர் 29 ந்தேதி இரவு 08:36 மணி முதல் அக்டோபர் 31 ந்தேதி நடு இரவு 01:54 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:49pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:09pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – சதுர்த்தி விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். குடும்பத்தில்உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்

ரிஷபம்

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளெடுக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சகஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக்கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சில
வற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள்பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில்வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!