இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி 19 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 19*
*ஆகஸ்ட் – 04 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*ஸுக்ல*
*சதுர்த்தி ( 44.25 ) ( 11:35pm )*
&
*பஞ்சமி*
*பானு*
*பூரம் ( 6.54 ) ( 08:29am )*
&
*உத்திரம்*
*பரிக யோகம் ( 5.34 ) ( 08:05am )*
&
*ஶிவ யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு ஆகஸ்ட் 04 ந்தேதி மதியம் 02:22 மணி முதல் ஆகஸ்ட் 06 ந்தேதி மாலை 05:07 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:05am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:53am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – நாக சதுர்த்தி*_
&
_*சதுர்த்தி விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – ஸித்த யோகம்*_

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
04-08-2019
ஞாயிறு
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மேஷம் ♈

உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
ரிஷபம் ♉

உங்களுடைய பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மிதுனம் ♊

உங்களின் பாசிடிவான அணுகுமுறை உங்களை சுற்றியுள்ளவர்களை ஈர்த்திடும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். ரொமான்ஸ் ஆனந்தமாக அதிக உற்சாகமாக இருக்கும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகழ்ந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கடகம் ♋

உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது – வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது – எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுங்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். விருந்தினர்கள் வருகையால் ஆனந்தமடையும் அற்புதமான நாள். உறவினர்களுக்காக ஸ்பெஷலாக திட்டமிடுங்கள். அவர்கள் அதைப் பாராட்டுவார்கள். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
சிம்மம் ♌

ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். ரொமான்சுக்கு உற்சாகமான நாள் – மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள், அதை முடிந்தவரை ரொமாண்டிக்காக ஆக்கிட முயற்சி செய்யுங்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கன்னி ♍

மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஜாலியாக இருங்கள். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
துலாம் ♎

இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
விருச்சிகம் ♏

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
தனுசு ♐

திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்களுடன் மன வருத்தம் கொண்டிருந்த ஒருவர், அதை தெளிவுபடுத்தி சரி செய்ய முயற்சி செய்வார். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் – ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மகரம் ♑

உணர்ச்சிபூர்வமாக நீங்கள் மிக்க நிலையான எண்ணத்தில் இருக்க மாட்டீர்கள் – எனவே எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதிலும் மற்றவர்கள் முன் என்ன சொல்கிறீர்கள் என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் – உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கும்பம் ♒

நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். மன ரீதியாக இணை பிரியாத ஜோடிகளான பின் உடல் ரீதியான நெருக்கம் மேலும் இன்பம் தரும்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மீ

உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். குழந்தையின் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இவை தற்காலிகமானவை. காலப்போக்கில் இவை மறைந்துவிடும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
💚💚💚💚💚💚💚💚💚💚💚
💚💚💚💚💚💚💚💚💚💚💚

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!