இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 05.1.2020 ஞாயிற்றுக்கிழமை மார்கழி – 20 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 20*
*ஜனவரி – 05 – ( 2020 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*ஸுக்ல*
*தசமி ( 48.5 )*
*பானு*
*அஸ்வினி ( 12.38 ) ( 11:23am )*
&
*பரணி*
*ஸித்த யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – கன்னி ராசி*_

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு ஜனவரி 04 ந்தேதி காலை 08:56 மணி முதல் ஜனவரி 06 ந்தேதி இரவு 07:07 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:35am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:55pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:23am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*வர்ஜ யோகம் – ஸுப யோகம்*_

 

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். வெற்றியடையும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் அணுகுமுறையை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்பமாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

கடகம்

கடகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம், யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. மாற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பதற்கு போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புதொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நினைவாகும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கனிசமான லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்…

Leave a Comment