இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 6.11.2019 புதன்கிழமை ஐப்பசி – 20 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 20*
*நவம்பர் – 06 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*நவமி ( 8.30 ) ( 09:21am )*
&
*தசமி*
*ஸௌம்ய*
*அவிட்டம் ( 7.5 ) ( 08:57am )*
&
*சதயம்*
*வ்ருத்தி யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு நவம்பர் 05 ந்தேதி இரவு 07:43 மணி முதல் நவம்பர் 08 ந்தேதி காலை 07:12 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:49pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:33pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கி யவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்துகொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். உத்தியோகத் தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நல்ல மாற்றம் ஏற்படும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். மனதில் குழப்பமும், தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கும் என்பதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சா கமான நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்பாரத தனவரவு உண்டு. நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புதிய யுக்தியால் சாமர்த்தியம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடை யும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். மகிழ்ச்சிகரமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புக்களை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.வியாபாரத்தில் உங்கள் ஆளுமை குறையும். புதியவாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். முயற்சியால் முன்னேறக்கூடிய நாள்.

தனுசு

தனுசு: அரசால், ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உற்சாகமுடன் செயலாற்றும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனேமுடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். இன்பம் கிடைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சல் தரும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!