இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 6.12.2019 வெள்ளிக்கிழமை கார்த்திகை – 20 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 20*
*டிசம்பர் – 06 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*ஸுக்ல*
*தசமி ( 60.0 )*
*ப்ருகு*
*உத்திரட்டாதி ( 43.30 ) ( 11:32pm )*
&
*ரேவதி*
*ஸித்தி யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*_

_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._

_*சிம்ம ராசி* க்கு டிசம்பர் 05 ந்தேதி மதியம் 02:15 மணி முதல் டிசம்பர் 07 ந்தேதி நடு இரவு 01:46 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:20am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:41pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:08am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸித்த யோகம் – அமிர்த யோகம்*_

 

மேஷம்

மேஷம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து, புகழ் கிடைக்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், ஆற்றலும் ஏற்படும். பிள்ளைகளின், தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உதவிகள் கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால், புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகளுடன் பிரச்சினைகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை, அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், மற்றும் அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: துணிச்சலாகவும், தைரியமாகவும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: இது வரை கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், மனதில் இனம் புரியாத பயம் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் பிணக்குகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் மன உலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதமாகும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!