இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 6.04.2020 திங்கட்கிழமை பங்குனி – 24 | Today rasi palan

*திங்கள் /Monday*
*{06 – April – 2020}*
*பங்குனி 24/ Pankuni 24*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*ஶிஶிர ருது / Shishira R’thu*

*மீன மாஸம் /*
*Meena Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*த்ரயோதஶி* / *Thrayodhashi* ~
Up to 01:47 Pm வரை
பின் *சதுர்தஶி* /
Then *Chathurdhashi*

*இந்து வாஸரம்/Indhu Vaasaram*

*பூரம்* / *Pooram* ~
(பூர்வ ஃபல்குனீ /Poorva Phalgunee)
Up to 10:03 Am வரை
பின் *உத்ரம்* /Then *Uthram*
(உத்தர ஃபல்குனீ /
Uththara Phalgunee)

_யோகம் / Yogam_
*வ்ருத்தி* / *Vr’dhdhi*
Up to 09:27 Pm வரை
பின் *த்ருவம்* /Then *Dhr’vam*

_கரணம் / Karanam_
*தைதிலை* / *Thaithilai*
Up to 01:47 Pm வரை
பின் *கரஜை* /Then *Garajai*

_ஶ்ராத்த திதி_
*மீன ஶுக்ல த்ரயோதஶி & சதுர்தஶி, திதி த்வயம்*

_Shraaddha thithi_
*Meena Shukla Thrayodhashi & Chathurdhashi, Thithi Dhwayam*

அம்ருதாதி யோகம் ~
*ஶுபம் & Naasham*

Amr’thaadhi yogam ~
*Subham & Amr’tham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:14 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:23 Pm*

*நல்ல நேரம் /Favour: time ~*
06:30 – 07:30 Am &
03:00 – 04:00 Pm

ராஹு காலம்/ Rahu Kaalam
07:30 – 09:00 Am

எம கண்டம் / Yema Ghantam
10:30 -12:00 Am

குளிகை காலம் /Gulikai Kaalam
01:30 – 03:00 Pm

வார ஶூலை/பரிஹாரம் ~
*கிழக்கு /தயிர்*

Vaara Shoolai /Remedy ~
*East /Curd*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*மகரம்* / *Makaram*
Up to 03:30 Pm வரை
பின் *கும்பம்* /Then *Kumbham*

இன்று ~
*பங்குனி உத்ரம்*

Today ~
*Pankuni Uthram*

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

 

இன்றைய (06-04-2020) ராசி பலன்கள்

மேஷம்

தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : கவலைகள் நீங்கும்.

பரணி : மாற்றம் உண்டாகும்.

கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்

வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பதற்றாமின்றி நிதனத்துடன் உயர் அதிகரிகளிடம் பேசவும். பொன் போன்ற ஆபரணங்களை கையாளும் போது கவனம் வேண்டும். செய்யும் பணியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : விரயங்கள் ஏற்படும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
—————————————
மிதுனம்

இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப் படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : இலாபம் உண்டாகும்.

புனர்பூசம் : திட்டங்கள் நிறைவேறும்.
—————————————
கடகம்

தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : காரியசித்தி உண்டாகும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
—————————————
சிம்மம்

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். பூமி விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : வருத்தம் உண்டாகும்.
—————————————
கன்னி

அந்நியர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பொதுப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் போது கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நட்பு கிடைக்கும்.

அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சித்திரை : கவலைகள் குறையும்.
—————————————
துலாம்

எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் மேம்படும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : செயல்பாடுகள் மேம்படும்.

சுவாதி : பதற்றமான நாள்.

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
விருச்சகம்

சுபச்செய்திகள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : வெற்றி கிடைக்கும்.

கேட்டை : மனச்சோர்வு உண்டாகும்.
—————————————
தனுசு

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சந்தேக உணர்வால் நெருக்கமானவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : செல்வாக்கு உயரும்.

பூராடம் : பிரச்சனைகள் தீரும்.

உத்திராடம் : தேவைகள் பூர்த்தியாகும்.
—————————————
மகரம்

பொதுக் கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————
கும்பம்

நீர் நிலை சம்பந்தமான தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

சதயம் : அன்பு அதிகரிக்கும்.

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
————————————— மீனம்

இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கவலைகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

ரேவதி : கவனம் வேண்டும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!