இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 7.11.2019 வியாழக்கிழமை ஐப்பசி – 21 | Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 21*
*நவம்பர் – 07 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*தசமி ( 13.27 ) ( 11:24am )*
&
*ஏகாதசி*
*குரு*
*சதயம் ( 13.15 ) ( 11:24am )*
&
*பூரட்டாதி*
*த்ருவ யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு நவம்பர் 05 ந்தேதி இரவு 07:43 மணி முதல் நவம்பர் 08 ந்தேதி காலை 07:12 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:12am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:46pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:12pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*தக்த யோகம் – ஸுப யோகம்*_

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபார நுணுக்கங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். புகழ்பெறும்நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கொடுத்தவாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபார தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். காரியம் சித்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதியபாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்தி யோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். திருப்பங்கள் ஏற்படும்நாள்.

கடகம்

கடகம்: மாலை 4 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கபாருங்கள். கோபத்தைதவிருங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுகொள்வது நல்லது.

சிம்மம்

சிம்மம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கிதருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். நன்மைகிட்டும் நாள்.

கன்னி

கன்னி: பணவரவு திருப்தியாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு கிடைக்கும்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும்நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். பழைய கடனை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில்அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும்நாள்.

தனுசு

தனுசு: துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் உடல் நலனில் அக்கறைகாட்டுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிபெறும்நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: மாலை 4 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்கவேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில்
போராடி லாபம் ஈட்டுவீர்கள்.

மீனம்

மீனம்: உங்கள் வேலைகளை சரியாக முடிக்க அதிக முயற்சி எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம்வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்துசெல்லும்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!