இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 7.2.2020 வெள்ளிக்கிழமை தை – 24 | Today rasi palan

*07-02-2020 – வெள்ளிக்கிழமை*

*தை 24*

*விகாரி வருடம் – 2020*

நாள் சிறப்பு

நல்ல நேரம் :

காலை – 09.30 – 10.30
மாலை – 04.30 – 05.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 01.30 – 02.30
இரவு – 06.30 – 07.30

இராகு – 10.30 AM – 12.00 PM

குளிகை – 07.30 – 09.00 AM

எமகண்டம் – 03.00 – 04.30 PM

திதி : மாலை 04.58 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம் : காலை 06.34 வரை அமிர்தயோகம் பின்பு இரவு 10.55 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

நட்சத்திரம் : இரவு 10.55 வரை புனர்பூசம் பின்பு பூசம்

லக்ன நேரம்:

மேஷ லக்னம் 10.26 AM முதல் 12.09 PM வரை

ரிஷப லக்னம் 12.10 PM முதல் 02.12 PM வரை

மிதுன லக்னம் 02.13 PM முதல் 04.23 PM வரை

கடக லக்னம் 04.24 PM முதல் 06.32 PM வரை

சிம்ம லக்னம் 06.33 PM முதல் 08.35 PM வரை

கன்னி லக்னம் 08.36 PM முதல் 10.37 PM வரை

துலா லக்னம் 10.38 PM முதல் 12.44 AM வரை

விருச்சிக லக்னம் 12.45 AN முதல் 02.55 AM வரை

தனுசு லக்னம் 02.56 AM முதல் 05.03 AM வரை

மகர லக்னம் 05.04 AM முதல் 07.00 AM வரை

கும்ப லக்னம் 07.01 AM முதல் 08.42 AM வரை

மீன லக்னம் 08.43 AM முதல் 10.22 AM வரை

சுப ஓரைகள்.

காலை :

சுக்கிர ஓரை 06.01 முதல் 07.00 வரை

புதன் ஓரை 07.01 முதல் 08.00 வரை

சந்திர ஓரை 08.01 முதல் 09.00 வரை

குரு ஓரை 10.01 முதல் 11.00 வரை

பகல் :

சுக்கிர ஓரை 01.01 முதல் 02.00 வரை

புதன் ஓரை 02.01 முதல் 03.00 வரை

சந்திர ஓரை 03.01 முதல் 04.00 வரை

இரவு :

குரு ஓரை 05.01 முதல் 06.00 வரை

சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை

பொதுத்தகவல்:

நாள் – சமநோக்கு நாள்

சூரிய உதயம் – 06.35

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

பண்டிகை:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிரறுப்பு.

பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம், இரவு வெள்ளி ரதம்.

திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய் தாழி சேவை, இரவு ராஜாங்க அலங்காரம்.

கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.

வழிபாடு:

மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

உயர் பதவியேற்க நல்ல நாள்.

வியாபாரம் தொடங்க சிறந்த நாள்.

தற்காப்பு கலைகள் கற்க ஏற்ற நாள்.

சுபச்செயல்கள் மேற்கொள்ள சிறப்பான நாள்.

வரலாற்று நிகழ்வுகள்:

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த தினம்.

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

 

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* .🚩பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்*

*தை* ~ *24*

*🔔07.02.2020🔔 வெள்ளிக்கிழமை.*

*வருடம் ~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}*

*அயனம் ~ உத்தராயணம்.*

*ருது ~ ஹேமந்த ருதௌ.*

*மாதம் ~ தை ( மகர மாஸம்).*

*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*

*திதி ~ திரயோதசி மாலை 04.58 PM. வரை. பிறகு சதுர்த்தசி.*

*ஸ்ரார்த்த திதி ~ திரயோதசி .*

*நக்ஷத்திரம் ~ புனர்பூசம்.*

*யோகம் ~ சித்த யோகம்.*

*கரணம் ~ கௌலவம் , தைதுலம்.*

*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*

*ராகு காலம் ~ காலை 10.30 AM ~ 12.00 NOON.*

*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM*.

*குளிகை ~ காலை 07.30~ 09.00 AM*.

*சூரிய உதயம் ~ காலை 06.35. AM*.

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.08 PM.*

*சந்திராஷ்டமம் ~ கேட்டை, மூலம்.*

*சூலம் ~ மேற்கு. பரிகாரம் ~ வெல்லம்.*

*🔔07-02-2020🔔*

*⚜🔯🚩ராசி பலன்கள்⚜🔯🚩*

*🔯மேஷம் ராசி*

உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். அலைச்சல்களால் மேன்மையான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : அங்கீகாரம் கிடைக்கும்.

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

*🔯ரிஷபம் ராசி*

வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். இன்சூரன்ஸ் தொடர்பான பணிகளால் இலாபம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : குழப்பங்கள் நீங்கும்.

மிருகசீரிஷம் : இலாபம் ஏற்படும்.

*🔯மிதுனம் ராசி*

உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய இலக்கை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருவாதிரை : உறவுகள் மேம்படும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

*🔯கடகம் ராசி*

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

பூசம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் வந்துசேரும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய கலைகளை கற்க ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : ஆர்வம் ஏற்படும்.

உத்திரம் : உயர்வு உண்டாகும்.

*🔯கன்னி ராசி*

புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.

அஸ்தம் : சிக்கல்கள் நீங்கும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

*🔯துலாம் ராசி*

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : சாதகமான நாள்.

சுவாதி : மாற்றம் உண்டாகும்.

விசாகம் : செல்வாக்கு உயரும்.

*🔯விருச்சிகம் ராசி*

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை நேரிடலாம். பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : கவனம் வேண்டும்.

*🔯தனுசு ராசி*

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். ஆபரண, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : மனக்கசப்புகள் குறையும்.

உத்திராடம் : தனலாபம் உண்டாகும்.

*🔯மகரம் ராசி*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் இட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திராடம் : முயற்சிகள் மேலோங்கும்.

திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.

அவிட்டம் : வெற்றி உண்டாகும்.

*🔯கும்பம் ராசி*

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும். தீர்ப்புகளில் சாதகமான சூழல் அமையாது. மகான்களின் ஆசிகள் கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான திட்டங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : புதிய நட்பு கிடைக்கும்.

சதயம் : உறவுநிலை மேம்படும்.

பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

*🔯மீனம் ராசி*

தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயணங்களால் இலாபம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.

உத்திரட்டாதி : இலாபம் ஏற்படும்.

ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.

Leave a Comment