இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9.11.2019 சனிக்கிழமை ஐப்பசி – 23 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 23*
*நவம்பர் – 09 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*த்வாதசி ( 23.43 ) ( 03:24pm )*
&
*த்ரயோதசி*
*ஸ்திர*
*உத்திரட்டாதி ( 25.54 ) ( 04:12pm )*
&
*ரேவதி*
*ஹர்ஷண யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*

_*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*_

_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._

_*சிம்ம ராசி* க்கு நவம்பர் 08 ந்தேதி காலை 07:12 மணி முதல் நவம்பர் 10 ந்தேதி மாலை 06:40 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:12am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:46pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:24am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – சனி ப்ரதோஷம்*_
&
_*க்ஷீராப்தி நாத பூஜை*_

 

மேஷம்

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.கனிவாக பழகுங் கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழி யர்கள் பாராட்டுவார்கள். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சாதனை செய்யும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். ஆன்மிகப்பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாற்றம் தரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவு எடுக்கப்பாருங்கள். வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல் படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆத ரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாக திரும்பும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுத்தியால் விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப் புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்ப்பார்த்தவை தள்ளிபோனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. வரவேண்டிய பணத்தை போராடி வசூலீப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். தடைகளை மீறி வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமைப்படும் சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்துசேரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். முயற்சியால் முன்னேற்றம் பெறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால், தீர்வு காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வதால் லாபம் பெருகும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மனதில் குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள் வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்..

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!