இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 31.07.2019 புதன்கிழமை ஆடி 15 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 15*
*ஜூலை – 31 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*சதுர்தசி ( 13.29 ) ( 11:17am )*
&
*அமாவாசை*
*ஸௌம்ய*
*புனர்பூசம் ( 22.9 ) ( 02:53pm )*
&
*பூசம்*
*வஜ்ர யோகம்*
*ஸகுணி கரணம்*
*ஸ்ராத்த திதி – அமாவாசை*

_*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*_

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு ஜூலை 31 ந்தேதி காலை 09:08 மணி முதல் ஆகஸ்ட் 02 ந்தேதி மதியம் 12:02 மணி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:05am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:29pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸர்வ அமாவாசை*_
&
_*ஆடி அமாவாசை*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

இன்றைய ராசி பலன்கள் 31.07.2019 ஆடி (15 ) புதன்கிழமை

மேஷம்: பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்: உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி: அநாவசிய செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

துலாம்: துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணயோகம் உண்டாகும்.

விருச்சிகம்: சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

தனுசு: அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வேலையின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அவர்களால் பெருமை ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்: காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

கும்பம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்: புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இந்த வாரம் தவிர்க்கவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!