விருச்சிகம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Viruchigam Rasi palan 2019

மனதில் பட்டதை நேரடியாக பேசும் விருச்சிக ராசிக்காரர்ளை பொறுத்தவரை 2019 ஆண்டில் அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த வருடம் உங்கள் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக இருக்கும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

எல்லாவற்றிலும் செயலிலும் செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பிறருக்கு கொடுத்த இருக்கும் சற்று இழுபறிக்கு பின்பே வசூலாகும். தொழில், வியாபாரங்களை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க மாதங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் வியாபார ரீதியன பயணங்கள் வெற்றியை தரும்.

வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் பாதச் சனி நடப்பதால், பல் வலி, காது வலி ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளை எதற்கும் வற்புறுத்தவேண்டாம். கூடுமானவரை அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியிடங்களில் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகி பின்பு கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.  பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசும் போது கவமுடன் பேசுவதால் சர்ச்சைகளில் சிக்கி போது தவிர்க்கலாம்.

விவசாயிகளுக்கு தொடக்கத்தில் சிறிது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பின்வரும் காலங்களில் நல்ல லாபங்கள் பெறுவார்கள். மாணவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்க முடியும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.

வயதானவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்ப நபர்களாக இருந்தாலும் பரவாயில்லை

தினமும் நல்லதையே நினையுங்கள்

காகம் அல்லது மற்ற பட்சிகளுக்கு இரை அளியுங்கள்.

நாவை அடக்குங்கள். இனிய சொற்களைப் பேசுங்கள்.

பெற்றோரிடமும்,முன்னோர்களிடமும் ஆசி பெறுங்கள்

ஓம் ஆஞ்சனேயாய வித் மஹே

வாயு புத்ராய தீ மஹி

தன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்

என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்

சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!