Ramakrishnar bird life story

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று.

கர்ம வினையும் அதைக் கடந்து போகும் உபாயமும்…

கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கப்பலின் மேல் தளத்துக் கட்டை ஒன்றில் ஒரு பறவை வந்து அமர்ந்தது. அது தன்னிலேயேலயித்து, தனை மறந்து அமர்ந்திருந்தது. கப்பல் கரையை விட்டு அகன்று, நடுக்கடலுக்குள் சென்றுவிட்டது.

தன்நிலைக்கு வந்த பறவைக்கு அப்போதுதான்,தான் கரையை விட்டு வெகு தூரத்திற்கு வந்து விட்டது தெரிந்தது. கப்பலின் ஒரு முனைக்கு எதிரான திசையில் வெகு தூரம் பறந்து சென்றும், கரை காணாததால்,மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்தது.

இது போலவே ஏனைய மூன்று
திசைகளிலும் பயணித்து, கரையைக் காணாமல்,மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்த பறவை அமைதியாக அந்தக் கப்பலிலேயே அமர்ந்து விட்டது.

அதற்கு இப்போது ஒன்று புரிந்திருந்தது. இந்தக் கப்பல், கரையை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற உண்மைதான் அது.

கர்ம வினைகளை ஒரு பார்வையாளராக இருந்து, அனுபவித்துக் கடப்பதே புத்திசாலித்தனம்…!

இறையே குருவே சரணம் சரணம்…

Leave a Comment