திருப்தி – திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா?
தநமது சூழ்நிலைகள் எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றதா?
சிலநேரங்களில் அதிருப்தி ஏற்படுவதற்கு என்னகாரணம்?
மனம் காலியாக இருப்பதற்கான காரணம் என்ன?
ஏதோ ஒரு எதிர்பார்ப்பு நமக்குள் பூர்த்தியாகாமல் இருப்பதுதான் காரணம். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாமல் போவதால்தான் மனம் அதிருப்தி அடைகின்றது. மனிதனிடம் எதிர்பார்ப்பு, அல்லது விரும்பிய பதார்த்தங்களின் மீது எதிர்பார்ப்பு, விருப்பப்பட்ட பொருட்களின் மீதான எதிர்பார்ப்பு இப்படி ஏதோ ஒருவிதத்தில் எதிர்பார்ப்பு, அது நிறைவேறாவிட்டால் அங்கே அதிருப்தி உற்பத்தியாகின்றது.
ஒருவருக்கு உணவில் சுவை சிறிதளவு குறைந்தால் கூட அதிருப்தி, கடவுளுக்கு வாங்கி சென்ற மாலையை அர்ச்சகர் சரியாக போடாவிட்டால் அதிருப்தி, கல் காலில் தடுக்கிவிட்டால் அதிலும் அதிருப்தி, சிலர் கதவின் மீது தானே சென்று மோதிவிட்டு கதவை போட்டுஅடித்துக்கொண்டு இருப்பர். இப்படியெல்லாம் அதிருப்தி ஏன் ஏற்படுகின்றது? நம்முடைய விருப்பம் அங்கே நிறைவேறாத எரிச்சல். சரி திருப்தியாக மனதை வைத்துக்கொள்ள முடியுமா?
மனம் என்பது ஒரு ஓட்டைப்பானை அதில் எவ்வளவுதான் நீரை ஊற்றினாலும் நிரம்பாத. இப்படி நிரம்பாத மனம் எப்படி திருப்தி அடையும் என்று நீங்கள் கேட்கின்றீர்களா? மனதை எப்படி திருப்தியடைய
வைக்கலாம். மனதில் எப்பொழுதும் நிறைந்த திருப்தியான பொருளை வைப்பதன் மூலம் மனம் திருப்தி அடையும். அந்த பொருள் பரம் பொருள் ஈசன். ஏனென்றால், எல்லாவற்றிலும் நிரம்பியவர், எல்லாவற்றையும் நிரப்புபவர் தந்தை ஈசனை தவிர யாருமில்லை.
மோகத்தை நீக்கி என்னிடம் சரணடைவாயாக என்பது இறைவாக்கு, மோகம் என்பது அதிருப்தியின் கிரீடம் ஆகும். மோகத்தால் ஆசை உற்பத்தி ஆகின்றது. ஆசை எதிர்பார்ப்பை உருவாக்குகின்றது. எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்தால் அங்கே மனம் அதிருப்தி அடைகின்றது. ஒருவர் வீட்டில் பலகாரம் செய்கின்றனர் அதை சாப்பிட காத்திருப்பவர் அதன் மீது மோகம் வைத்து
எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றார்.
அதை சாப்பிட ஆசைப்பட்டு மன ஆசையுடன் எதிர்பார்க்கின்றார்கள். சுட சுட தட்டுக்கு வந்த அந்த பலகாரத்தில் சுவையில்லை. முகம் சுளித்த வாறு அதிருப்தியால் வைத்துவிட்டு சென்று விடுகின்றார். இதனால் அதை செய்தவருக்கு மனக்கஷ்டம், பொருட்கள் வீணடிப்பு, நேரத்தின் இழப்பு என்று எல்லாவிதத்திலும் இழப்பு, உலகில் எத்தனையோ வயிறுகள் பசிக்காக காத்திருக்கும்பொழுது, அந்த நிலைமையை ஆண்டவன் நமக்கு ஏற்படாமல் பாதுகாப்பதால் அந்த நிலைமையை நாம் உணர்ந்தாரில்லை.
உலகில் பிறரது கஷடங்களை முன் வைக்கும் பொழுது நமக்கு இறைவன்அருளால் ஒன்றுமே இல்லை என்பதை உணர வேண்டும். கோவிலில் உப்பு போடாமல் பிரசாதம் இருந்தாலும் கடவுளுடைய பிரசாதம் என்று பயபக்தியுடன் சாப்பிடும் நாம், இதே வீட்டின் நிலைமையில் அப்படி இல்லை. காரணம் மோகம், கோவிலில் மட்டும் இறைவனுடையது, வீட்டில் என்னுடையது, நான் வாங்கியது என்ற எண்ணம். நமது வீட்டுக்கும் படியளப்பவர் தந்தை ஈசன்தான் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.
நம்மாளால தான் நடக்கின்றது என்ற ஆணவம்தான் மனதில் வெறுப்பை ஏற்படுத்துகின்றது. உண்மை நிலை என்னவென்றால் தந்தை ஈசனின் கருணை இல்லாமல் ஒரு அரிசியின் பருக்கை கூட நம் வீட்டிற்குள் வரமுடியாது. நாம் வெறும் அதற்கு பாதுகாவலர் ஆவோம். ஆஸ்திக்கு அதிகாரம் கொடுத்தவர் மேலே இருக்கின்றார். நமக்கு எதுக்கு பிடிவாதம். நமக்கு எதுக்கு ஆணவம். எப்பொழுது எல்லாம் ஈசன் செயலென்றால் அங்கே அதிருப்தி எங்கே இருந்து வந்தது. களஞ்சியங்களை நிரப்புபவர் மனதில் இருந்தால் மனம் நிறைந்திருக்கும்.
மனம் மகிழ்ச்சி அடையும். எல்லாம் தந்தை ஈசனுடையது. ஆனால், தந்தை ஈசன் மட்டும் என்னுடையவர் யார் இந்த மனோ நிலையில் உள்ளவரோ அவர் எப்பொழுதும் திருப்தியாக இருப்பார், அதிருப்தி அங்கே விடைபெற்று விடும். மனம் திருப்தியின் உறைவிடமாகிய
தந்தை ஈசனால் திருப்பதியின் பெருமாளை போல திருப்தியாக என்றும் மகிழ்ந்திருப்பார்.
நல்வாழ்த்துகள்!
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More
Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More
Rishabam sani peyarchi palangal 2025-27 சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi… Read More
கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2025-27 சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29,… Read More
Mithunam sani peyarchi palangal 2025-27 கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி (Mithunam sani peyarchi)… மிதுன… Read More