Arthamulla Aanmeegam

சந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் | Chandrashtama days remedies

சந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் | Chandrashtama days remedies

🌛சந்திராஷ்டமம் – சந்தோஷம் கிடைக்க பரிகாரம்…!

🌛’சந்திராஷ்டமம்’ என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன்

🌛 இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும்.

🌛ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.

🌛உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

🌛தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.

🌛சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

🌛ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

🌛நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.

🌛 முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும்.

🌛சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும்.

🌛 இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

🌛இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

🌛மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

🌛மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

🌛கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

🌛சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

🌛கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

🌛துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

🌛விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

🌛தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

🌛மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

🌛மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.

🌛வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்…

 

This article explains about the remedies that to be done by each person based on their zodiac sign to be happy during the Chandrashtama / sandhirashtama days.. Each day would have Chandrashtama for each star. Everyone can check their Chandrashtama days in the daily calendar. This article will help you for getting good remedies from Chandrashtama….

 

*ஓம் நமசிவாய*

*சந்திராஷ்டமம் பற்றிய பதிவுகள் :*

இறைவன் சிருஷ்டித்த இந்த உலகில் ஒருவர் பிறக்கும்போது முக்கியமாக கருதப்படுவது லக்னமாகும். லக்னம் என்பது உயிர் போன்றது. லக்னம் அடுத்து நாம் பார்க்கக்கூடியது ராசியே. இந்த ராசி என்பது நமது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை கொண்டே நமது ஜென்ம ராசியானது நிர்ணயிக்கப்படுகிறது. நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ அதுவே நமது ஜென்ம நட்சத்திரமாகும்.

சந்திரன் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் என ஒவ்வொரு நட்சத்திரத்திலும் தனது பயணத்தை தொடங்குகிறார். அதனால் தான் என்னவோ லக்னமான உயிர் சந்திரன் பயணிக்கும் நட்சத்திரத்தினால் சில சுப பலன்களையும், அசுப பலன்களையும் அனுபவிக்கின்றது.

சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டே கால் நாட்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும் காலம் சந்திராஷ்டம காலம் ஆகும்.

*சந்திராஷ்டமம் – சந்திரன் + அஷ்டமம்.*

அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்.

உடலுக்கும், மனதிற்கும் காரணமான சந்திரன் அஷ்டம இடத்தில் அதாவது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது சந்திரஷ்டமம் ஏற்படுகின்றது அல்லது நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு பதினேழாவது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.

ஜோதிடத்தில் சந்திரன் ‘மனோக்காரகன்” என்று அழைக்கப்படுவார். நம் மனதையும், எண்ணங்களையும் வழிநடத்தும் சந்திரன் மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் மறைந்தால் இந்த உடலும், மனமும் சந்திரன் அஷ்டமத்தில் பயணிக்கும் அந்த இரண்டே கால் நாட்கள் பலவிதமான இன்னல்களை அனுபவிக்கின்றது.

சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது அவருடைய பார்வை நமது ஜென்ம ராசியின் இரண்டாம் இடமான குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.

*சந்திராஷ்டம தினங்களில் தவிர்க்க வேண்டியவை :*

சந்திராஷ்டம தினங்களில் நமது மனமும், எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே, சந்திராஷ்டம தினங்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்த்து விட வேண்டும்.

திருமணம் போன்ற சுப செயல்கள் நிர்ணயிக்கும்போது மணமகள், மணமகன் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம தினங்கள் இல்லாத நாட்களாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டம தினங்களில் புதிய தொழில் துவங்குதல் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு போன்ற சுப செயல்களை சந்திராஷ்டம தினங்களில் தவிர்ப்பது உத்தமம்.

சந்திராஷ்டம தினங்களில் வாகனங்களில் வேகம் குறைத்து நிதானத்துடன் செல்ல வேண்டும்.

பணிபுரியும் இடங்களில் பதற்றம், கோபம், ஒருவிதமான சோம்பல் உணர்வு, மறதி மற்றும் வாக்குவாதம் போன்றவை ஏற்படும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    2 days ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    2 days ago

    Today rasi palan 25/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வியாழக்கிழமை சித்திரை – 12

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 12* *ஏப்ரல் -… Read More

    29 mins ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    6 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    6 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago