வீடு கிரகப்பிரவேசம் (gruhapravesam Special info); சிறந்த மாதம், லக்னம், கிழமை, ராசி, நட்சத்திரங்கள்
வீட்டில் நடக்கும் விசேஷங்களில், முக்கியமான விசேஷம்… கிரகப்பிரவேசம்தான். வாழ்க்கையில், சொந்தமாக ஒரு வீடு என்பதுதான் இங்கே பெரும்பாலானோருக்கு பெருங்கனவு.
*சிறுகச் சிறுகச் சேர்த்து, கடனுதவியும் பெற்று, ஆசை ஆசையாகக் கட்டியாக வீட்டுக்கு நல்லநாள் பார்க்கவேண்டும். நல்ல நேரம் பார்க்கவேண்டும்.
✡️அப்படியொரு நாளில், கிரகப்பிரவேசம் செய்வதே சிறப்பு வாய்ந்தது என்பது ஐதீகம்.*
கிரகப்பிரவேசம் செய்வதற்கு, நல்ல மாதம் என சில மாதங்கள் இருக்கின்றன. அதேபோல் நல்ல நட்சத்திரங்கள், நல்ல ராசிகள் என்றெல்லாம் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
‘நல்ல நாளும் நட்சத்திரமும் பார்த்து குடிபோகணும்’ என்ற பழமைமிக்க வார்த்தையே இருக்கிறது.
*🔯சிறந்த மாதங்கள்:*
சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை முதலான மாதங்கள், கிரகப் பிரவேசம் செய்வதற்கான சிறந்த, உகந்த மாதங்கள் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்தால், குடும்பம் தழைக்கும், சந்ததிகள் கடந்தும் வீடும்வாசலும் நிலைக்கும் என்பது ஐதீகம்.
*🔯சிறந்த கிழமைகள்:*
திங்கட்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை. இந்த நான்கு கிழமைகளும் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த கிழமைகள்.
*🔯சிறந்த நட்சத்திரங்கள்:*
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நட்சத்திரங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
*🔯சிறந்த லக்னங்கள் :*
ரிஷப லக்னம், மிதுன லக்னம், கன்னி லக்னம், விருச்சிக லக்னம், கும்ப லக்னம் ஆகியவை வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வதற்கு உரிய அற்புதமான லக்கினங்கள்.
*🔯கூடவே கூடாது :*
ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டை புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்…
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More
Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More
Rishabam sani peyarchi palangal 2025-27 சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi… Read More
கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2025-27 சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29,… Read More
Mithunam sani peyarchi palangal 2025-27 கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி (Mithunam sani peyarchi)… மிதுன… Read More