கடன் தீர வேண்டுமா? விநாயகருக்கு கொள்ளு தீபம் ஏற்றுங்கள்
வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோயில் சென்று மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த எண்ணையில் கொள்ளு பயிரை ஏழு என்ற எண்ணிக்கையில் போட்டு அதன்பிறகு திரிபோட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார உங்களுக்கு இருக்கும் கடன்கஷ்டங்கள் தீரவேண்டும் என்று மனமுருக வேண்டி வணங்கவும்…தொடர்ந்து 16 வியாழக்கிழமை மேற்படி தீபம் ஏற்றி 16 வது வாரம் உங்கள் கையால் கட்டப்பட்ட அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்கு சாற்றி உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து ஒரு கிலோ கொள்ளு வெற்றிலை பாக்கு பூ பழம் இயன்ற தட்சணை தாம்பாளத்தில் வைத்து அர்ச்சகருக்கு தானமாக கொடுத்துவிடவும்….இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்தால் கடன்பிரச்சனை படிப்படியாக குறையும்.மேலும் மேலும் கடன் வாங்காமல் இருப்பதற்கு உண்டான வழியையும் கஜமுகன் காட்டுவார்….
வாய்ப்பு கிடைக்கும் போது வியாழக்கிழமை எமகண்ட வேளையில் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் செய்ய வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்….