சொன்னபடியே விருந்தாவனம் சென்று, கிருஷ்ணரைச் சந்திக்கும் நாளுக்காக காத்தி ருந்தார். அவரது பக்தர் என்ற முறையில், கிருஷ்ணரை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப்போவது பற்றி மகிழ்ந்தார். அதே நேரம், கம்சனின் பிரதிநிதியாக வந்திருப்பதால், கிருஷ்ணர் தன்னை என்ன செய்வாரோ என்ற பயமும் மனதில் எழுந்தது.
இருப்பினும் தனது தேரில் சென்று கிருஷ்ணர் இருக்கும் இடத்தை அடைந்தார். விருந்தாவனத்துக்குள் அக்ரூரரின் ரதம் நுழைந்தது. ஓரிடத்தில் மரகத மலையும், வெள்ளிமலையும் சேர்ந்து ஒளி வீசியது போன்ற பிரகாசம் ஏற்பட வே ரதத்தை நிறுத்தினர்.
அங்கே கிருஷ்ணரும், பலராமரும் ஒளிபொங் கும் உடலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்ததால் மணலில் பதிந்த அவர்களது பாதச்சுவடுகளைத் தான் அக்ரூரர் முதன்முதலாகப் பார்த்தார். அவற்றை மனதார தரிசித்தார். அந்த பாதசுவடுகளை பார்த்த பிறகு, கிருஷ்ண, பலராமரின் முகங்களை உற்று நோக்கினார் அக்ரூரர். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கிருஷ்ண, பலராமர் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
எதிரியின் தூதராய் வந்தாலும், தனது பக்தர் அக்ரூரர் என்பது அந்த பரந்தாமனுக்கு தெரி யும், அவர்கள் விரைந்து வந்து அக்ரூரரை வரவேற்றனர். அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு ஒரு பசுவை தானமாக வழங்கினர். அவரை உணவருந்தச் செய்து, சந்தனம் முதலானவை பூசி உபசரித்த னர்.
இதன்பிறகு, அக்ரூரர் கம்சனின் திட்டம் பற்றி யும், நாரதர் அங்கு வந்து சென்றது பற்றியும் தகவல் தெரிவித்தார். மதுராவில், தனுர் யக்ஞ விழா நடக்க இருப்பது பற்றியும், அதில் கோகுலத்திலுள்ள இளைஞர்கள் அனைவரும் வரவேண்டும் என்ற கம்சனின் உத்தரவு பற்றியும் சொன்னார். கிருஷ்ணர் அதற்குரிய ஏற்பாட்டை உடனடியாக முடித்தார். அவர்கள் மதுராவுக்கு புறப்பட்டனர். தேர் புறப்பட்டது. கோபியர்கள் வந்து மறித்தார்கள்.
கண்ணா, நீ போகாதே என கண்களாலேயே தடுத்தார்கள். அவர்களில் மனநிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவர்களிடம், அருமை கோபியரே, என்னைஉங்கள் மனதால் கட்டிப் போடாதீர்கள். என்னை அவிழ்த்து விடுங்கள் உங்களுடன் களித்து விளையாடு வேன், என உறுதியளித்தார்.
கோபியர் ஒருவழியாய் வழிவிட ரதங்கள் புறப்பட்டன. செல்லும் வழியில் யமுனை நதி வந்தது. அங்கே ஒரு ஐந்துதலை நாகம். அது தன் உடலை மடித்திருக்க, அதன் மீது விரிக்கப் பட்ட பஞ்சு மெத்தையில் பரமாத்மா சயனித்தி ருக்கும் காட்சி அக்ரூரருக்கு தென்பட்டது. ஆம், மாயக்கண்ணன் தன் பக்தனான அக்ரூரருக்கும் இப்படி காட்சி தந்தார். இந்த தரிசனத்தின் போது, அக்ரூரர் மனம் குளிர்ந்து கிருஷ்ணரை துதித்தார்.
தேர்கள் மதுராபுரிக்கு நுழைந்தன. அக்ரூரர் தனது இல்லத்துக்கு வரும்படி கிருஷ்ணரை அழைத்தார். கிருஷ்ணர் அவரிடம், அக்ரூரரே ! மதுராவிலுள்ள என் குல எதிரிகளை அழித்த பிறகு, உமது இல்லத்துக்கு வருகிறேன், என்றார். அக்ரூரருக்கு மனதுக்கு கஷ்டமாயி ருந்தாலும், அந்தக் கடவுளின் வார்த்தையில் நிச்சயம் அர்த்தமிருக்கும் என்பதப் புரிந்து கொண்டு, கம்சனிடம் சென்றார். கிருஷ்ணர் மதுராவுக்கு வந்துவிட்ட செய்தியை அவனுக்கு அறிவித்தார்.
கிருஷ்ண, பலராமர் தம் திட்டப்படி மதுராவுக்கு வந்துவிட்டாலும், கம்சனுக்கு உள்ளூர பயம். அவர்களை எப்படியும் மடக்கிவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தான். கிருஷ்ண பலராமர்கள் மதுரா நகரை தங்கள் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தனர். அந்த நகரம் மிக நேர்த்தியாக இருந்தது. மாளிகை போன்ற வீடுகளில் உள்ள கதவுகள் பத்தரை மாற்று பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. செல்வச்செழிப்புக்கு இலக்கணமான ஊர் அது. எதிரிகளை மடக்க ஆங்காங்கே அகழிகள் தோண்டப்பட்டிருந்தன.
கிருஷ்ணர், வழியில் சென்ற ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்தார். நீ எனக்கு அரண்மனைவாசிகள் உடுத்தும் விலை உயர்ந்த ஆடைகளைக் கொடு, என்றார். அந்த தொழிலாளி, சிறுவனே, கம்சமகாராஜாவின் ஆடையைக் கேட்குமளவுக்கு உனக்கு தைரியம் வந்து விட்டதா? ஓடிப்போய்விடு. மன்னரின் தண்டனைக்கு ஆளாகாதே, என்றார்.
கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டதுஅவனை ஒரு அடி அடித்தார். அவன் இறந்து விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தையல் காரன் ஓடி வந்தான். ஐயா ! இது என் கடையில் ஒருவர் தைக்கக் கொடுத்தார்.
இதை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள். பொருத்தமாயிருக்கும், என்றான். அவர் அதை அன்புடன் அணிந்து கொண்டார். அந்த மட்டி லேயே அந்த தையல்காரன் ஸாரூப்ய முக்தி அடைந்து விட்டான். அந்தத்தெரு வழியே ஒரு கூன் விழுந்தபெண் வந்தாள்.அவள் கிருஷ்ண சகோதரர்களை கவனித்தாள். அவள் இளமை யானவள். ஆனால் ஊனமுற்றவள். கம்சனு க்கு சந்தனம் பூசுவது அவளது பணி. அவள் அவர்களைக் கண்டதும் அழகில் சொக்கி நின்றாள்.
பெண்ணே, நீ யார்? இந்த சந்தனக்கிண்ணத்துடன் எங்கே செல்கிறாய்? என்றதும், அவள் கம்சனின் அரண்மனைக்குச் செல்வதாக தெரிவித்தாள். இந்த சந்தனம் மிக அருமையா ன மணம் கொண்டதாக உள்ளதே. எங்களுக்கு இதை பூசமாட்டாயா? என்றதும், அவள் மகிழ்ச்சியுடன், இது ராஜாவுக்கு உரியதுதான். இருப்பினும், அவரை விட மிக உயர்ந்தவர்க ளாக உங்களைக் கருதுகிறேன்.
மனதளவில் உயர்ந்தவர்களுக்கே சந்தனம் பூசும் உரிமையுண்டு. நான் பூசுகிறேன். எனச் சொல்லி, கிருஷ்ணரின் மார்பில் தடவினா ளோ இல்லையோ, அந்த உடல் ஸ்பரிசம்பட்ட தும், அவளது கூன் நிமிர்ந்தது. அவள் அழகிய வடிவத்தை அடைந்தாள். தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. முற்பிறவி ஞாபகம் வந்தது.
ஆ ராமா, நீயா, உனக்கு நான் துரோகம் இழைத்தேன். உன் சிற்றன்னையிடம் சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்த கொடுமைக்காரி யடா. இப்பிறவியிலும், நான் அதே ஊனத்து டன் பிறந்தேன்.
இருப்பினும், எனக்கு செய்த உதவியை என்ன சொல்லி வர்ணிப்பேன். எனக்கு பேச்சே வரவில்லை. ராமா, உன் சிற்றன்னைக்கு நான் செய்த சேவைக்கு பரிசாக இப்படி செய்துவிட் டாயே ! முற்பிறவியில், கொடுமைக்காரியா யினும் கூட, உன் தரிசனம் எனக்கு கிடைத்தது என்பதன் பலனை இப்போது அனுபவித்து விட்டேனோ, பரந்தாமா, நான் எவ்வளவு பெரிய பாக்கியவதி.
அன்று ராமதரிசனம், இன்று கொடுமைக்கார னான கம்சனுக்கு பணியாளாக இருந்தும் கிருஷ்ண தரிசனம் காட்டினாய். உனக்கு சேவை செய்யும் பாக்கியம் தந்தாய், என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த நினைவலைகளை மறக்கச் செய்து விட்டார் கிருஷ்ணர்.
இப்போது, தன்னிலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், கிருஷ்ணரின் மீது காதல் கொ ண்டவளாய், கிருஷ்ணா, இத்தனை அழகிய உருவத்தை கொடுத்த நீயே என்னை அடைய வேண்டும். வா, என் இல்லத்துக்கு என்றாள். பெண்ணே, நான் உன் இல்லம் வருவேன். கவலைப்படாதே. நான் வந்த காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
இதற்குள் கம்சன் கிருஷ்ண ரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டான்.
மிகப்பெரிய மல்யுத்தத்துக்கு ஏற்பாடு செய்து சிறந்த வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். மல்யுத்தப் போட்டிக்கான களம் தயாராகி விட்டது. மதுராபுரியின் பிரபல மல்யுத்த வீரர்களான சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். எல்லாருமே மிக பல சாலிகள். வயதிலோ, வீரத்திலோ கிருஷ்ண, பலராமருக்கு சற்றும் ஒத்து வராதவர்கள். அவர்கள் களத்தில் காத்திருந்த வேளையில், கம்சன் கிருஷ்ணரைக் கொல்ல மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தான்.
அவர் வரும் வழியில், குவாலயாபீட என்ற யானையை கம்சன் நிறுத்தியிருந்தான். அந்த யானையைக் கண்டால், பிற யானைகள் ஓட்டமெடுக்கும். அப்படிப்பட்ட சக்திமிக்க அந்த யானையை கிருஷ்ண பலராமர் வரும் வழியில் வேண்டுமென்றே மறைத்து நிறுத்தி யிருந்தான் அதன் பாகன். கிருஷ்ணர் யானை யை ஒதுக்கி நிறுத்தும்படி பாகனிடம் சொல்ல வே அவன் கண்டுகொள்ளவில்லை. பாகனின் நோக்கம் கிருஷ்ணருக்கும் புரிந்து விட்டது என்றாலும், முறையாக அவனிடம் சொல்லிப் பார்த்தார்.
அவன் முடியாது என வம்பு செய்யவே, கோப மடைந்த கிருஷ்ணர் யானையை மிக லாவக மாகத் தாண்டிச் செல்ல, அவர்களை பிடிக்கும் படி யானையை பாகன் ஏவினான்.
யானை தும்பிக்கையை அவர்களை நோக்கி நீட்ட, கிருஷ்ணர் யானையை ஓங்கிக் குத்தினார். அவரது பலம் தாங்காத யானை சுருண்டது. அதன் வாலை பிடித்து தரதரவென இழுத்தார். பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். யானை பிளிறித்துடித்தது உயிர் விட்டது. பாகனையும் ஒரே அடியில் வீழ்த்திய மாயக் கிருஷ்ணர், வெற்றி வீரராக மல்யுத்த களத்துக்குள் புகுந்தார். அவர்கள் வருவதற்குள் முன்னால் ஓடிச்சென்ற வீரன் ஒருவன், கம்சனிடம் யானை கொல்லப்பட்ட விபரத்தைச் சொல்லி விட்டான். கூட்டத்தினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது..
அந்த மாவீரர்கள் அரங்கில் நுழையவும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைந்த னர். பார்வையாளர்கள் வரிசைக்கு கிருஷ்ண ரும் பலராமரும் சென்றனர்.
அப்போது சாணூரன், கிருஷ்ணா, பலராமா, ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள்? போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லையா? என்றான். கிருஷ்ணர் அவனிடம், சாணூரா, இங்கே பலத்திலும், வீரத்திலும், அனுபவத்திலும் சிறந்த வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மோதினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் சிறுவர்கள். எங்களோடு நீங்கள் மோதினால், பார்ப்ப வர்களுக்கு ரசனை இருக்காது. மேலும், அது நியாயமும் அல்ல, என்றார்.
கிருஷ்ணா, நீங்கள் குவாலயபீட யானையையே கொன்றவர்கள் என்ற தகவல் எங்களுக்கு நீங்கள் வரும் முன்பே கிடைத்துவிட்டது. அதை விடவா நாங்கள் பலசாலிகள். அதனால், நீங்கள் எங்களோடு மோதலாம், வாருங்கள் என்றான்.
கிருஷ்ணர் சாணுரனையும், பலராமர் முஷ்டி கனையும் எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்க ளது அடியை அந்த மல்லர்களால் தாங்க முடியாமல் கூக்குரலிட்டு இறந்தனர். அடுத்து மற்ற மல்லர்கள் சிலர் களமிறங்க அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதைக் கண்ட மற்ற மல் லர்கள் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண பலராமரை பாரட்ட மனமில்லாதது மட்டுமின்றி, வீரர்களே, இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மது ராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோ தா, வஞ்சகம் புரிந்த வசுதேவர், இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும், என ஆணையிட்டான். கிருஷ்ணருக்கோ மகா கோபம். சற்றும் நியாயமின்றி நடந்த அந்தக் கொடியவன் மீது பாய்ந்தார். அவனது கிரீடத் தை தட்டிவிட்டார். அவனது தலைமுடியை பிடித்து இழுத்தார்.
ஆசனத்தில் இருந்து சரிந்து விழுந்த அவனை இழுத்து வந்தார். மல்யுத்த களத்தில் அவனை கொண்டு வந்து கீழே தள்ளினார். மார்பின் மீது ஏறி அமர்ந்தார். கம்சனுக்கு மூச்சு முட்டிய து. ஒரே குத்தில் அவன் உயிரை விட்டான். அவனது உயிர் வைகுண்டத்தை அடைந்தது,
கொடுமைக்காரனாயினும், சதாசர்வகாலமும் கிருஷ்ணரையே நினைத்தவன் அவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே சிந்தித்தவன். வைகுண்டத்தில் அவனுக்கு ஸாரூப்ய சொரூபம் கிடைத்தது. இந்த சொல்லுக்கு நாராயணனைப் போலவே உருவமெடுத்தல் என்பது பொருள்.
வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயண னை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறு வார்களாம்.அந்த வடிவத்தை கருணைக்கடலா ன நாராயணன், கம்சனுக்கு அளித்தருளினார். கீதையில் ‘தத் பாவ பாவித்’ என்று சொல்லப் பட்டுள்ளது.
ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கிருஷ்ணரை நினைத்தாலும், அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது.
கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோரர்கள் இருந்தனர். கிருஷ்ணரால், அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும் ஆத்திரமடைந் தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டனர்.
தாய்மாமனைக் கொல்வதை வேதம் அனுமதி க்கவில்லை. ஆனால், கம்சனைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கிருஷ்ணருக்கு ஏற்ப ட்டது. ஏனெனில், கம்சனைக் கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என்பது அசரீரி வாக்கு. அதன் காரணமாக, பகவான் இங்கே வேதத்தின் கட்டளையை மீற வேண்டியதாயிற்று.
சரி, இது அனுமதிக்கப்பட்ட ஒன்றானால், இப்போது தன்னைத் தாக்க வரும் மற்ற தாய் மாமன்களை என்ன செய்வது? எல்லாருமே தேவகியின் சகோதரர்கள். இவர்களை அழிக்க ஒரே வழி தன் அண்ணன் பலராமன் தான்.
ஏனெனில், அவர் ரோகிணியின் மகன். அவ்வ கையில், எதிரே நிற்பவர்கள் தாய்மாமன்மார் ஆக முடியாது. அந்த எட்டு பேரையும் கொல்லும் பணியை பலராமர் ஏற்றுக் கொண்டார். குவலாயபீட யானையைக் கொன்ற போது, கிருஷ்ணரும் அவரும் ஆளுக்கொரு தந்தத் தை ஒடித்து வந்திருந்தனர்.
அந்த தந்தத்தைக் கொண்டு, கம்சனின் சகோ தரர்களைத் தாக்கினார் பலராமர். ஒருவன் பின் ஒருவராக அவர்களை கொன்றார். அப்போது, தேவலோகத்தில் இருந்து மலர் மாரி பொழிந்தது. கிருஷ்ண பலராமரின் வீரமான செயல்களால் யசோதையும், நந்த கோபனும் ஆனந்தமாகி கண்ணீர் வடித்து நின்றனர்.
கிருஷ்ணர் கடவுள் என்பது நன்றாக தெரிந்து விட்டதால், அவரைத் தொட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. கிருஷ்ணரோ அவர்களின் பாதத்தில் விழுந்து ஆசி வழங்கச் சொன்னார். அவர் கடவுள் என்பதால் அவருக்கு ஆசி வழங்கும் தகுதி தங்களுக்கு இல்லை எனக்கருதி, அவர்கள் ஒதுங்கி நின்றனர்.
அப்போது கிருஷ்ணர் அவர்களிடம், தாயே, தேவகி என்னைப் பெற்றவள் என்றாலும் நீயே என்னை வளர்த்தாய்.
என் பால்ய பருவ விளையாட்டுகளை நீயே ரசித்தாய். அம்மா, இந்த உடல் தாய் தந்தையின் உறவால் பிறக்கிறது. அதன் காரணமாக பெற்றவர்களுக்கு கடன்படுகிறது. இந்தக் கடனை தீர்க்குமளவுக்கு சமஅளவுள்ள பொருள் எவ்வுலகிலும் இல்லை. ஏனெனில், மனிதனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே எல்லா வற்றையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக் கிறது.
மனிதப்பிறவிக்கு மட்டுமே இந்த உடலை விடுத்து, இறைவனிடம் சேர்வதற்குரிய அறிவு தரப்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் வேறு, வளர்த்தவர்கள் வேறல்ல. அவ்வகையில், நீங்கள் என்னை ஆசீர்வாதிக்க தகுதியுள்ளவர்கள் ஆகிறீர்கள்.
இதைக்கேட்டு மகிழ்ந்த யசோதையை தம்பதி யர் தங்கள் அன்பு மகனை வாரியணைத்தனர். பலராமனுக்கு முத்தமழை பொழிந்தனர். அவர்களது கண்களில் கண்ணீர் பெருகியது. இதன் பிறகு தன் தாத்தா உக்ரசேனரை சந்தித்த கிருஷ்ணர், யது ராஜ்யத்தின் அதிபதி யாக அவரை அறிவித்தார்.
கம்சனுக்கு பயந்து ஒளிந்திருந்த மன்னர்க ளெல்லாம் மகிழ்ந்து, உக்ரசேனரை பணிந்து வணங்கினர். மதுரா மக்கள் கிருஷ்ணரை தினமும் வணங்கும் பாக்கியம் பெற்றனர். முகுந்தா எனக் கூறி அழைத்தனர்.
இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவன் எனப் பொருள். நிச்சயமாக, மதுரா மக்கள் பர மானந்தத்தில் மூழ்கினர் என்றால் மிகையல்ல சில நாட்களுக்கு பிறகு, விருந்தாவனத்துக்கு யசோதையும், நந்த குமாரரும் புறப்பட்டனர். கிருஷ்ணரை அவர்கள் அழைத்தனர்.
அம்மா, எனக்கு இன்னும் சில கடமைகள் இங்குள்ளன. வசுதேவர், தேவகியை சிறையில் இருந்து விடுவித்து, அவர்களுடன் சில நாட்கள் தங்கி வருகிறேன். என்னை வளர்த்த உங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாவும் என்னுடன் தான் இருப்பார். நாங்கள், நிச்சயம் விருந்தாவனத்துக்கு வருவோம், என்றார்.
அவர்கள், மகன்களைப் பிரிந்து கண்ணீருடன் புறப்பட்டனர். இதன் பின்னர் தேவகியையும், வசுதேவரையும் கிருஷ்ணர் சிறையில் இருந்து விடுவித்தார். வசுதேவர் தன் பிள்ளை களுக்கும், கர்க முனிவர் என்பவர் மூலம் புனித நூல் சடங்கை செய்து வைத்தார்.
கிருஷ்ணர் பிறந்த போது, மனதால் செய்த பசுதானத்தை இப்போது அவர், நிஜமாகவே செய்தார். பின்னர், தன் மகன்களை சாந்தீபனி முனிவரிடம் கல்விபயில அனுப்பி வைத்தார். இத்தனை காலமும் மாடு மேய்த்து திரிந்த அந்த இளைஞர்கள் இப்போது அறிவியல், அரசியல், கணிதம், சகுனக்கலை, வைரங்களு க்கு பட்டை தீட்டும் கலை என சகல சாஸ்திரங் களையும் ஆசானிடம் கற்றனர்.
பயிற்சி முடிந்ததும், ஆசானிடம், குருவே, தங்க ளுக்கு தர வேண்டிய குருதட்சணை என்ன? என்றதும், குரு ஏதும் பேசாமல், அருகில் இருந்த தன் மனைவியை பார்த்தார், அவளது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது.
தாயே, தங்கள் கண்கள் பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க விரும்புகி றீர்கள். தாரளமாகக் கேளுங்கள், என்றனர் கிருஷ்ணரும் பலராமரும்.
குறுக்கிட்ட சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே “எங்கள் மகனுடன் பிரபாஸ
ஷேத்திர (குஜராத்திலுள்ள சோமநாதம் என கருதப்படுகிறது) கடற்கரைக்குச் சென்றிரு ந்தோம். அவன் அதில் மூழ்கி விட்டான். அவனை மீட்டுத்தர வேண்டும், என்றனர்.
இறந்து போன ஒருவனை மீட்பதென்றால் அது தெய்வத்தாலேயே முடியும். இங்கே பகவான், இரட்டை அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவரால் முடியாதது தான் என்ன? அவரிடம் ஆசிபெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண பலராமர்.
சமுத்திரராஜன் அவர்களின் திவ்யதரிசனம் கண்டு ஓடோடி வந்து பணிந்தான். ஸ்ரீ கிருஷ்ணா, நான் தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன? உன்னிடம் மூழ்கியுள்ள எங்கள் குரு சாந்தீபனியின் மகனை திருப்பிக்கொடு, என்றார் கிருஷ்ணர். தேவாதி தேவா, அவன் எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்துச் சென்றான். ஒருவேளை அச்சிறுவ னை அவன் உயிருடன் விழுங்கியிருக்க கூடும்.
சங்கு வடிவில் என்னுள் மறைந்திருக்கும் அவ னைப் பிடித்தால் விபரம் தெரியும், என்றான் பணிவுடன். கிருஷ்ண பலராமர் சற்றும் தாமதிக்காமல், கடலுக்குள் சென்றனர். அங்கே சங்கின் வடிவில் உருண்டுகொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது வயிற்றைக் கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை. சங்கு வடிவ அசுரனைக் கொன்று வெளியே தூக்கி வந்தனர். அவர்கள் நேராக யமலோகம் சென்றனர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்…

Leave a Comment