குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் (Lord Muruga) இருக்கும் இடம் என்பார்கள்.
அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி தரும் கோவில்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முருகனின் அறுபடை வீடுகள் மிகவும் சிறப்பானது, சில இடங்களில் மட்டும் மிக அரிதாக தோற்றத்தில் காட்சி தருகிறார் எம்பெருமான் முருகன்.
முருகப் பெருமான் குழந்தை வடிவேலன், வேடுவன், சன்னியாசி, நாக சர்பம் , தவசி, லிங்க ரூபம் என வித்தியாசமாக காட்சி தருவதுடன் முருகன் சிலையில் வியர்க்கும் அதிசயம் சிக்கலில் காணலாம்.
அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள் :
1. முருகப் பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தரும் தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழி.
2. சனி ஸ்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
3. சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் முருகன் காட்சி தருகிறார் . இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது இன்னொரு அதிசயம்
4. வழக்கமாக அம்மனுக்கு தான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
5. கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.
6. திருவையாறு ஐயாரப்பர் சன்னதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் தனுசு சுப்ரமண்யராக முருகன் அருள் பாலிக்கிறார்.
7. திருப்போரூரில் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்துல இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்கும் தயாராவதை போல காட்சி தரும் முத்துக்குமார சுவாமி .
8. நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.
9. மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.
10. மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் நெய்குப்பை எனும் ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக காட்சி தருகிறார்.
11. திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.
12. புதுக்கோட்டைக்கு அருகே ஒற்றைக் கண்ணனூரில் , ஒரு கையில் ஜப மாலையுடனும், மறு கையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார் முருகன்.
13. கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவிலில் முருகன் பாம்பு வடிவில் காட்சி தருகிறார் . இந்த பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதுமில்லை, பாம்பை யாரும் துன்புறுத்துவதும் இல்லை.
14.கனககிரி தலத்தில் முருகன் பெருமான் கையில் கிளியுடன் காட்சி தருகிறார்.
15. செம்பனார்கோவில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலையுடன், தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
16. கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் எனும் ஊரில் மாமன் திருமாலைப் போல் முருகப் பெருமானும் கையில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார் .
17. பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் வில், அம்புடன் காட்சி தருகிறார்.
18. ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை என்னும் இடத்திலுள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடிவேல் வடிவில் வேலவனாக காட்சி தருகிறார் .
19. பெரம்பலூர் அருகில் செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.
20. நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
21. திருவண்ணாமலை – வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக இங்கு தரிசிக்க முடியும்.
22. சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறும் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.
23. ஈரோடு மாவட்டம் காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைப்பதைப போல முருகன் காட்சி தருகிறார்.
24. நாகப்பட்டினம் திருவிடைச்சுழியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும், தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.
25. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி, மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கி நிற்பது அதிசயமான காட்சியாகும்.
மேலும் படிக்க:
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் – எந்தது சிறந்தது? வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் – வேறுபாடுகள்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *பங்குனி - 13* *மார்ச்… Read More
Kandha Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam tamil lyrics)… Read More
Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More