Navarathri pooja timings
நவராத்திரி பூஜைக்கு உகந்த நல்ல நேரம்
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரிக்க வேண்டும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது கூடுதல் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
நவராத்திரி வழிபாட்டு முறைகள் :
*முதலாம் நாள் :*
🎎 சக்தியை முதல்நாளில் தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்த சாமுண்டியாக வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டா என அழைக்கப்படுகிறாள். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே. நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.
*இரண்டாம் நாள் :*
🎎 இரண்டாம் நாளில் அன்னையை வராகி (பன்றி) முகமும், தெத்துப்பற்களும் உடைய வராகி தேவியாக வழிபட வேண்டும். ஏவல், பில்லி, சு னியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். நைவேத்தியம் : தயிர் சாதம்.
*மூன்றாம் நாள் :*
🎎 மூன்றாம் நாளில் சக்தியை கிரீடம் அணிந்து வஜ்ராயுதம் ஏந்திய இந்திராணியாக வழிபட வேண்டும். இவள் விருத்திராசுரனை அழித்தவள். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவும் இவளுடைய அருட்பார்வை கிடைக்க வேண்டும். நைவேத்தியம் : வெண் பொங்கல்.
*நான்காம் நாள் :*
🎎 சக்தித்தாயை சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் ஏந்திய வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். இவள் தீயசக்திகளிடம் இருந்து காப்பவள். நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்.
*ஐந்தாம் நாள் :*
🎎 ஐந்தாம் நாளில் அன்னையை திரிசு லம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்த வாகனத்தில் காட்சியளிக்கும் மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சர்வ மங்களம் தருபவள். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப் பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். நைவேத்தியம் : புளியோதரை.
*ஆறாம் நாள் :*
🎎 இந்த நாளில் அன்னையை மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்திய கௌமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். நைவேத்தியம் : தேங்காய் சாதம்.
*ஏழாம் நாள் :*
🎎 அன்னையை ஏழாம் நாள் கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றை ஏந்திய மகாலட்சுமியாக கருதி வழிபட வேண்டும். இவள் சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். நைவேத்தியம் : கல்கண்டு சாதம்.
*எட்டாம் நாள் :*
🎎 அன்னையை மனித உடலும், சிம்ம தலையும் உடைய நரசிம்மகியாக வழிபாடு செய்ய வேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.
*ஒன்பதாம் நாள் :*
🎎 இன்று அன்னையை அன்ன வாகனத்தில் இருக்கும் பிராக்மியாக வழிபட வேண்டும். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.
நைவேத்தியம் : அக்கார வடிசல்…