Navarathri Types – நான்கு வகை நவராத்திரி..!
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி –சியாமளா நவராத்திரி
பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி
இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.
அரிசி மாவு கோலம்: சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண் கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை, பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்…
மிக எளிமையான நவராத்திரி பூஜை முறை: (கொரோனா காலம்)
🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱
*ஸ்ரீ சாரதா நவராத்திரி 2020 நாளை கொலு வைக்க நல்ல நேரம் சார்வரி புரட்டாசி 30 16.10.20 வெள்ளி கிழமை காலை 10.00- 10.30 (குரு ஹோரை) மாலை 05.00 – 06.00 ( குரு ஹோரை) மணிக்கு வைப்பது உத்தமம்* .
முதலில் கலசம் (ஜலம் (தண்ணீர்) அரிசி நிரப்பி) மாவிலை , தேங்காய் வைத்து) வைக்கவும் , ஸ்ரீ மஹா கணபதி , மரபாச்சி பொம்மை வைத்துவிட்டு பின்னர் மெதுவாக மற்ற பொம்மைகளை வைக்கலாம்.
3, 5 , 7 , 9
கணக்கில் கொலுபடி உங்களுடைய செளகர்யபடி வைக்கவும் , *கொரோனா காலம் என நமது பாரம்பரியமான விரதம் , பண்டிகைகளை விடாமல், அதே சமயம் சமுக இடைவெளி , சுகாதாரத்தை கடைபிடித்து செய்யவும்* , கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் *சிறிய அளவிலாவது நிச்சயம் வைக்கவேண்டும்* ( தவிர்க்க முடியாத காரணத்தால் வைக்க முடியாதவர்கள் தவிர).
நமது இல்லத்திற்கு *சுமங்கலி , கன்யா மற்றும் உறவினர்களை தினந்தோறும் குறிப்பிட்ட அளவில் அழைத்து* அவர்களுக்கு *நம்மால் முடிந்த போஜனம் , மஞ்சள் , வெற்றிலை , பாக்கு* போன்ற செளபாக்கிய திரவியங்களை கொடுத்து அவர்களை *அம்பாளாக பாவித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்* . வீட்டில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து *தினமும் தற்போது நிகழ்ந்துவரும் இடர்பாடுகளில் இருந்து விடுபட்டு நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் , அனைவரும் சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் , ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம் , அம்பாளின் பாடல்கள் , ஸ்லோகங்கள்* போன்றவற்றை தினமும் பாராயணம் , ஸ்ரவனம் செய்வோம்.
குறிப்பு:
பொதுவாக அம்பாளுக்கு கிழ்கண்ட நைவேத்யம் செய்யலாம் ,
*குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நைவேத்யம் என்பது எல்லாம் ஸாஸ்திரம் இல்லை உங்களால் முடிந்தவற்றை செய்து அன்னையின் அருளை பெறவும்*
சக்கரை பொங்கல்
பருப்பு பாயசம்,
எலுமிச்சை சாதம்,
தயிர் சாதம்,
கதம்ப சாதம்,
அகாரவடிசல்,
சுண்டல்கள்,
உளுந்து வடை,
புட்டு,
பழங்கள்.
இது போன்றே
சிகப்பு , பச்சை , நீலம் போன்ற வஸ்திரம் உத்தமம்
மாக்கோலம் , பூ கோலம் விசேஷம்