தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

 

பொங்கல் திருநாள். தை மாதப் பிறப்பு.

பொங்கல் படையலிட்டு சூரிய பகவானை வழிபடும் திருநாள். இந்த முறை பொங்கல் வைக்கும் நேரம் காலை 7 முதல் 8 மணி வரை. 15ம் தேதி இந்த நேரம்தான் சூரிய ஹோரை. எனவே இந்த நேரத்தில் பொங்கலிடுவது சிறப்பு வாய்ந்தது.

அடுத்து, அதாவது 8 முதல் 9 மணி வரை என்பது பூஜைக்கான காலம். இது, சுக்கிர ஹோரை. சுக்கிர ஹோரையில் பூஜை செய்தால், மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறலாம். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுக்கிர யோகம் கிடைக்கப் பெற்று இனிதே வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

எனவே, 15ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் பொங்கல் படையலிட்டு, சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து, வீட்டு பூஜையறையிலும் நைவேத்தியங்கள் செய்து, வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

காலை 7 முதல் 8 மணி என்பது சூரிய ஹோரை. 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரை. ஒருவேளையில் இந்தத் தருணத்தில் பூஜிக்க இயலாதவர்கள், பொங்கல் வைக்க முடியாதவர்கள், மதியம் 12 முதல் 1 மணி வரை, பொங்கலிட்டு வழிபடலாம். இந்த நேரம் குரு ஹோரை எனப்படுகிறது.

வீட்டில் கோலமிடுங்கள். பொங்கல் பானை வைக்கும் இடத்தில் கோலமிடுங்கள். பொங்கல் வைத்து,. பானைக்கு சந்தன குங்குமமிட்டு, மஞ்சள் கிழங்கு கொத்துகளை கட்டி, பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று கூவி, சூரியனைப் பிரார்த்தனை செய்வோம்.

இந்த தை பிறப்பு, எல்லா நல்லதுகளையும் தந்தருளட்டும். பொங்கும் பொங்கல், எல்லா ஐஸ்வர்யங்களையும் வழங்கி, உள்ளத்தையும் இல்லத்தையும் நிறைக்கட்டும்!

பொங்கும் மங்கலம் எல்லார் இல்லங்களிலும் தங்கட்டும்.!

பொங்கலோ பொங்கல் !

Leave a Comment