பூக்களும் அவற்றின் அதிதேவதைகளும்:
கோங்கம்பூ – சரஸ்வதி தேவி
அலரிப்பூ – பிரம்மா
வன்னிப்பூ – அக்னி தேவன்
நந்தியாவர்த்தம் – நந்தி தேவன்
புன்னைப்பூ – வாயு தேவன்
எருக்கம்பூ – சூரியன்
சண்பகப்பூ – சுப்பிரமணியர்
வில்வபத்திரம் (வில்வம்) – இலட்சுமி தேவி
கொக்கிறகம்பூ – விஷ்ணு
மாவிலிங்கை – வருணன்
மகிழ் – சரஸ்வதி தேவி
வாகை – நிருதி தேவன்
சாதிப்பூ – ஈசானன்
செங்கழுநீர் – சூரியன்
குமுதம் – சந்திரன்
மந்தாரை – இந்திரன்
மதுமத்தை – குபேரன்
நாயுருவி – இயமன்
தாமரைப்பூ – சிவபெருமானின் பிரத்யதிதேவதை
அனைத்து பூக்களிலும் தாமரைப்பூ மிகப் புனிதமானது. சிவபெருமானின் பிரத்யதிதேவதை எனக் கூறப்படும் தாமரை, சுத்தமும் ஞானமும் குறிக்கும் புனித சின்னமாக விளங்குகிறது.
உமாதேவி மற்றும் பிற வாசனை மலர்கள்
அருகம் பூவில் விநாயகர், தமனகத்தில் பைரவர், நீலோற்பலம் மற்றும் பிற வாசனை மலர்களில் உமாதேவி ஆகியோர் தங்கியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு பூவும் தெய்வீக ஆற்றல் கொண்டது என்பதை நம்மால் உணரமுடியும்.
அனைத்து பூக்களின் அதிதேவதைகளுக்குமே மேலான ப்ரத்யதிதேவதையாக இருப்பவர் சிவபெருமான்.
அதனால், எந்த மலராலும் பக்தியுடன் அர்ச்சனை செய்தாலும் அது இறைவனை அடையும் வழியாகும்.
