Arthamulla Aanmeegam

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்? | Puratasi month special

Puratasi month perumal special

Puratasi month Special – புரட்டாசி மாதம்! பெருமாள் மாதம்

⭐ ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருப்பதி ஏழுமலையான் தான். அதனால் தான் இந்த மாதத்தினை பெருமாளுக்கு உகந்த பெருமாள் மாதம் என்று கூறுகிறார்கள்.

⭐ புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.

Puratasi month

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்?

⭐ சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார். அதைக் கேட்ட சனி பகவான், எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே நாம் செய்வது போலவே! சனி பகவானும் என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைத்தார்.

⭐ கால் வைத்ததும் அடுத்த நொடி சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.

⭐ கோபம் கொண்ட பெருமாள் சனிபகவானிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

⭐ பிறகு சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கேட்டார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும்! என்ற வரத்தை கேட்டார்.

⭐ பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார். அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.

⭐ சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனிக்கிழமை. சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது.

பெருமாள் துதி

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ

⭐ திருமலை பெருமாள் திருவருளை பெற பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. இந்த துதியை தினமும் பாடி வந்தால் ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்…

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச விரதமுறை | Thai poosam

  தைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது… Read More

  5 days ago

  தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் | Pongal timing and celebration 2022

  தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துகள் *பொங்கல் பண்டிகையின் பூஜைக்கான நேரம்… Read More

  1 week ago

  Pradosham Dates 2022 | Pradosham Month wise Fasting dates

  Pradosham dates 2022 Pradosham dates 2022 Pradosham Puja Pradosh Vrat , which is also known… Read More

  2 weeks ago

  Shivaratri Dates 2022 | Monthly Shivaratri Days | Masik Shivaratri Viratham

  Shivaratri Dates 2022 Shivaratri Dates 2022 | Monthly Shivaratri Days | Masik Shivaratri Vrat January… Read More

  2 weeks ago

  Masik Kalashtami 2022 | Kalashtami Dates | Masik Kalashtami Vrat

  Masik Kalashtami 2022 Masik Kalashtami 2022 - Kalashtami Kalashtami , which is also known as Kala… Read More

  2 weeks ago

  அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல் | Hanuman jayanthi special info

  🔱அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்🔱 இடது கையில் மலையும், வலது கையில் தண்டாயுதமும் கொண்டவரே! பிரகாசிக்கும் குண்டலம் அணிந்தவரே! அனுமனே! உம்மை… Read More

  3 weeks ago