Arthamulla Aanmeegam

சியாமளா நவராத்திரி | shyamala navaratri

சியாமளா நவராத்ரி # (12-02-2021- to -20-02-2021) அனுஷ்டிக்கப்படுகிறது.

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை…
ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.

அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.

சாக்தமும் நவராத்திரிகளும்:

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும்.

பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை
நாம் அறிவோம்.

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ச்யாமளா தேவி
ச்யாமளா’ என்றும்,
‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,
ஸ்ரீமாதங்கி என்றும்,
‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,

மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு
எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி,
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.

அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.

அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,
(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.

இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி அருள்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே
ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது.

வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.

அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.

ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர்.

இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.

சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இன்று (15ம் தேதி சதுர்த்தி நாள்). நாளைய தினம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த பஞ்சமி.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

சகலகலா வள்ளி மாலை

சரஸ்வதி 108 போற்றி

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Kolaru Pathigam lyrics in Tamil

    Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால் உண்டாகும்… Read More

    1 day ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 week ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 week ago

    Komatha Stothram | பசுமாடு ஸ்தோத்ரம்

    பசுமாடு ஸ்தோத்ரம்       ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More

    1 week ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 week ago

    Shri Narashimma vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம்

    ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*!  வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More

    1 week ago