Siva temple miracles:
அதிசய சிவ தலங்கள்…!
நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு. அப்படி அதிசயங்களும், சிறப்புகளும் மிக்க கோவில்களைப் பற்றிப் பார்ப்போம்….!
🌟 விஸ்வநாதர் கோவிலில் மாலைவேளை பூஜையின் போது நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். அந்த நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளிலும் சந்தனத்தால் ‘ராமா” என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.
🌟 கும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் ‘பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
🌟 கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.
🌟 ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.
🌟 சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்களாம்.
🌟 திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது….
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்… Read More
ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023) Date ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023)… Read More
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu… Read More
சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil சின்ன சின்ன முருகா… Read More
வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran… Read More
Kandha sasti kavasam lyrics Tamil Kandha sasti kavasam lyrics in tamil - கந்த சஷ்டி கவசம்… Read More
Leave a Comment