சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம் | Sivapuranam Secrets tamil
சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான *சிவபுரத்தையும் கூறும் ஒரு சிவரகசிய புதையலாகும்.* (இங்கு *சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து* வரியை ஞாபகம் வைக்க)
தினமும் நமக்கு *இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.*
சிவபுராணத்தின் *முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும்* வரியை கவனிக்க *வா…ழ்….க, இது தமிழில் ழ்… என்ற எழுத்து மட்டுமே உள்நாக்குவரை சென்று தொட்டுவரும்.*
*உங்களுக்கு அமிர்தம் இயற்க்கையாக சுரக்கும் ஒரு துளி, உள்நாக்கில் படர்ந்து இருக்கும் அதை நாக்கு நுனியால் தொடும்போது உங்களுக்கு பலம் கூடும்.*
*இதனால் தான் இதை ஓதும் முன் உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்மத்தில் ஓத சொன்னார் வள்ளலார்.*
*இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும் அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய வாழ்க வாழ்க என ஆறு முறை பாடலில் வரும் இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வழுபடுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்வோம்.*
அடுத்தது *வெல்க வெல்க என்று அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிப்படுத்தி* அடுத்த பகுதிக்கு செல்கிறோம்.
இதற்கு *அடுத்த ஆறு வரிகள் இது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வழுபடுத்த போற்றி போற்றி என கூறுகிறோம். போ….ற்….றி இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும். இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வலிமையாகும்.*
அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம், தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது. இது புரிய மெய்யென்ற (உடம்புக்குரிய) எழுத்து அறிந்திருக்க வேண்டும்.
நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும் *அடியோ, வினையோ (சூட்சம) பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.*
*நான் செய்வினை , செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன். பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.*
சரி இந்த எழுத்தை ஆராய்வோம்…..
*வாழ்க + போற்றி = 2 : ½ : 1(மாத்திரை அளவு)*
மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான் ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு.
*போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வலிமையடையும் இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்.*
உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
பிராண தேகம் வலிமை என்றால் நீங்கள் வலிமை மிக்கவர்
இப்படி சிவபுராணம் பாடும்போது ஸ்தூல சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் *சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார்,* இப்போதான் நிற்க வைக்க முடியும்.
அவரிடமே அருள் பெற்று *வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார் இருபதாவது வரியில்,*
அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், நான் சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க
இப்படி மாணவன் தன் ஸ்தூல, சூட்சம தேகங்களை வழுபடுத்திய பின் சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.
*அடுத்து21வது வரி கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார் உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற, படித்த பல விடயங்கள் அங்கு வரும் அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும் அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.*
இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.
அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல்
*“விலங்கு மனத்தால் விமலா”*
விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடப்படுவது, அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது. இது மிகவும் முக்கியமான இடம் சித்தர்களின் குரல் நண்பர்களே!!!
*மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது. அதை தக்க குரு மூலம் அறிக.*
*இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும் அது தான் சிவபுரத்தின் (பிராண உலகத்தின்) நுழைவுவாயில், அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்*
*அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார். இது எல்லாம் சிவ யோகத்தில் அபூர்வயோக சாதனை என கருத்தில் கொள்க*
சிவபுரம் என்பது பிராண உலகம் அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதை போல் இருக்கும் அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள். அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.
*முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும். பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.*
*அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி அழைத்து செல்லுவர் என்கிறார்.*
*இது முழுக்க முழுக்க என் அனுபவ சூட்சம யாத்திரை…*
*இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும் இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும் அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால் அங்கு பயணத்தில் குழப்பம் வரும் பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.*
*இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும். அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும் இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான். சித்தர்களின் குரல் நண்பர்களே!! முதல் முறை மட்டுமே தடுமாற்றம் நடக்கும் பின் அனுபவம் கைகொடுக்கும்,இது முழுக்க முழுக்க என் அனுபவ உண்மை….*
*மேற்கண்டவற்றில் நான் சொல்லுவதும் மாணிக்கவாசகர் சொல்லுவதும் ஒன்றுதான் என உங்களுக்கு புலப்படும்.*
*இந்த சூட்சம பயணம் இயல்பாகவே பல சமயத்தில் தூக்கத்தில் எனக்கு அன்னை சித்தர் குருநாதரின் அருளால் நடந்திருக்கிறது. உங்களுக்கும் நடக்கும். ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகிறது பலருக்கு…*
*இங்கு நிறைய விஷயம் மறைப்பாக சிவ ரகசியமாகவே உள்ளது. ஆதலால் இது பயிற்சி அல்ல, அல்லவே அல்ல!*
மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் *கீர்த்தித் திருஅகவல்* கூறியிருப்பார். இது அகவல் என்றால், இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல். அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.
சற்று கவனிக்க அதில் சிவபெருமானின் பெருமை அனைத்தையும் கூறி கடைசி இரண்டு வரியில்
*“பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான்*
*”ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே*
கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவந்தான். சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.
இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி
அடுத்து *திரு அண்டபகுதிக்கு* செல்கிறார். பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார். பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.அதன் வழியாக சென்று பேராத்மா எனப்படும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார். இது வரைக்கும் உள்ள விடயங்கள் *போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும்* கூறுகிறார்.
அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.
இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம் அது பற்றி பின் பார்ப்போம்…
மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடல்களாக அடுத்த *திருச்சதகம்* என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார் இது தான் மிக முக்கியம் இதை கவனமாக ஆராய்க.
சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.
ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணம்போது என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என்பது கூறுகிறார். இது மிக முக்கியமான பகுதியாகும்
சிவபுராணம்
கீர்த்தித் திருஅகவல்
திருஅண்டப் பகுதி
போற்றித் திருஅகவல்
திருச்சதகம்
இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும் அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும்.
அது என்ன என்கிறீர்களா? அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய *”யோகஞானதாழிசை”* என்ற பாடல்கள் ஆகும்.
இதில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே ஆனால் மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் தான் இது. இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம்.
இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ள வேண்டாம். இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி. நாளுக்கு நாள் திருவாசகம் படிக்க ஆவல் கூடி கொண்டே போகிறது.
மொத்தத்தில் ஒரே வரியில் இந்த பதிவின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்ல வேண்டுமானால்…
*”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”*
*அவன் அருள் இருந்தால் தான் இந்த பதிவை கூட படிக்க முடியும். இந்த சிவரகசியங்களை கூட அறிய முடியும்*
மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்!!!
Ramakrishnar bird life story பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று. கர்ம வினையும் அதைக் கடந்து போகும்… Read More
பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning *புரட்டாசி சிறப்பு பகிர்வு* *கோவிந்தா! கோவிந்தா!!*… Read More
நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *புரட்டாசி - 28*… Read More
கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga mantram lyrics tamil மஹா பாரதத்தில் வன பர்வத்தில்… Read More
Athma and Anathma ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் - Athma and Anathma ஆத்மா, அனாத்மா,… Read More
View Comments
arumaiyaana pudhumaiyaana vilakkam. nandri. யோகஞானதாழிசை paadalkal 12m mollam vendume Yaar tharuvaar in dha paadalkal, Sivane Potri !!!
நன்றி ஐயா....