Arthamulla Aanmeegam

Snake ring benefits | பாம்பு மோதிரம் பலன்கள்

Snake ring benefits

பாம்பு மோதிரம் அணிந்தால் உண்டாகும் பலன்கள்

Snake ringநம் முன்னோர்கள் செய்த செயல்கள் எல்லாம் நமக்கு ஒரு புதிய பாடத்தை கற்று கொடுப்பது வழக்கம்…

அதே போல் ஒவ்வொரு ஆன்மீக செயல்களுக்கு பல பயன்கள் உண்டு….

யாரெல்லாம் அணியலாம்?

இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது…

இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன்?

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்    வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது.

உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.

மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது.

மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது.

மோதிர விரல் உங்கள் கணினி போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்.”

பாம்பு மோதிரத்தின் பயன்கள்:

ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது. அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது. சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.

Snake ring benefits:

Wearing a metal ring, especially that of copper, by a seeker or a sadhaka on the ring finger stabilizes the body and provides the fundamental support for sadhana or spiritual practices. With the right kind of sadhana, wearing the snake ring can become a key to mystical dimensions of life. Sadhguru has spoken many times about the importance of wearing these rings for people into sadhana.

 

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    9 hours ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Manjalilae neeradi song lyrics

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    9 hours ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    9 hours ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    8 hours ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    7 days ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago