சொர்க்கவாசல் உருவான கதை – sorga vasal history
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். “பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள்.
தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். “எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி #அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம்நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.
ஸ்ரீராமஜயம்
அசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல்
‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.
பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதே நேரம், திருமாலின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் இருவரும், அகங்காரத்தில் இருந்த பிரம்மனை கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய திருமால், ‘பிரம்மனைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரத்தை நான் தருகிறேன்’ என்றார்.
அதைக் கேட்ட அசுரர்கள் இருவரும், ‘நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்’ என்றனர்.
அவர்களின் அறியாமையை நினைத்து சிரித்த திருமால், ‘சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள், என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்றார்.
அசுரர்கள் திகைத்தனர். தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினர். ‘இறைவா! எங்களுக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களோடு நாங்கள் ஒரு மாத காலம் போரிட வேண்டும். அதன்பிறகு வதம் செய்யப்பட்டு, சித்தியடைய வேண்டும்’ என்று திருமாலை வேண்டினர்.
அவர்களின் வேண்டுதல்படியே, அசுரர்களிடம் போரிட்ட திருமால், இறுதியில் அவர்களை வதம் செய்தார். வதம் செய்யப்படும்போது, ‘இறைவா! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்’ என்று அசுரர்கள் இருவரும் வேண்டினர்.
அதன்படி அவர்கள் இறந்தபிறகு, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால், அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள்புரியும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு, அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.
பின்னர் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேறு, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், ‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும்…
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More
Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More
Rishabam sani peyarchi palangal 2025-27 சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi… Read More
கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2025-27 சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29,… Read More
Mithunam sani peyarchi palangal 2025-27 கால புருஷனின் மூன்றாவது ராசி, மிதுன ராசி (Mithunam sani peyarchi)… மிதுன… Read More