Arthamulla Aanmeegam

Spadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி

Spadiga maalai

ஸ்படிக மாலை பயன்கள்

படிகாரம் என்பதும், ஸ்படிகம் என்பதும் வேறு வேறு.

பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்.

அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து, கம்பிகள் இல்லாத, உடைசல்கள், பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில்கொட்டிக் கிடப்பதுண்டு.

துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும். அதில் எல்லாம்தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உருண்டையாகவும் ,பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிக கற்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .

உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது . நீரோடு நீராக ஒன்றி இருக்கும் தனியாக தெரியாது. அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும்.

முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.

சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும், நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும் . இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.

இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல்(Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.

ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.
இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600, அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.

அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108, ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.

 

Spadiga maalai

இப்படி தனக்குள் உள்ள ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள் படிகமாலை அனுப்புவதை இதன் மூலம்அறியலாம். ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு.

அதனால் தான் தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும்.

மனிதர்களகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?

சராசரியாக 21,600 மூச்சாகும். நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 ,மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

(இதனால்ஆயுள் குறையும்).

மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும்.

இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயேஇருக்கிறது.

மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான்அமைதியாக இருக்கும்.

ஸ்படிக மாலை நமது மனதை அலை பாயும் பீட்டா நிலையில்இருந்து அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும்.

பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.

ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும்.

இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின் பிம்பமாக இருக்கும்.

தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த நிறம்உண்டு.
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நிறங்கள்எங்கும் வியாபித்திருக்கின்றன.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிந்து கொள்பவர்கள் நிறமாலைக் கொள்கைப்படி தனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ள நிறத்தை இந்த
உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர்.

அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் சீரடையும். வேலைப் பளுவினால் ஏற்படும் களைப்பு தெரியாது.

இதயமும், நுரையீரலும் ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும்.

இது கர்ப்ப மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.

தெளிவான சிந்தனையை இது தூண்டுவதால் மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும். நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும்.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும் ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் வாக்கு பலிதத்தைப் பெறுவர்.

இதனை அணியும் அரசாங்க அதிகாரிகள் ஆளுமையைப் பெறுவதால் துணிச்சலாகப் பணியாற்றுவதற்கு ஸ்படிக மாலை உற்ற துணையாக இருக்கும். ஸ்படிக மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது.

இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது. இதனை அணிந்திருப்பவர் களிடம் எதிரிகள் சரணடைவர். இதனை அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள் கைகூடும்.

வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில்பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.

அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும்போகும் அணியக்கூடாது.

ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை தாங்கக்கூடிய சக்தி உள்ளது. ஸ்படிகலிங்கம்வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும்.

இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மிகவும்சிறப்பு வாய்ந்தது.

இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம்.

ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால்
என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.

எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும்.

அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச்செய்ய வேண்டும்.

அந்த தருணத்தில் உங்கள்
மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம்.

எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

(இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.)

சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை ஆன்மீகம் என்னும் தேனில்கலந்து கொடுத்தார்கள்.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும்,
சந்தோஷமாகவும் இருக்கும்.

ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறையாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம்.

அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள்
வாங்கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும்.

குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.
ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது.

மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள்
நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி ,கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத்
தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது .

இந்த மணி மாலையை அணிவதால் இது தொழிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன்குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை
செய்வதோடு ரத்த அழுத்த நோயை குனபடுத்துவதோடு நீரழிவு நோயையும் குணப்படுத்தும் .

இந்த ஸ்படிக மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி மந்த்ர ப்ரயோகம் செய்தால், வேண்டிய தெய்வம் ப்ரசன்னமாதி அருள் பாலிக்கும்.

மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலை அணிவது நமது உடலில் அதீகமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.
ஸ்படிக மாலை நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான சரியான அளவில் வெய்க்கும்.

ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.

மேலும் ..ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு
, அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது ,
அதனால்அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர் கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும்.

(இது உபாசகர்களுக்கு பொருந்தும்) இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலை அணிபவர்க்கு மட்டுமே பொருந்தும்.

அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.

இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்.

ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும். ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
#வாழ்க_வளமுடன்👁👃👁🌹

Share
ஆன்மிகம்

Leave a Comment

View Comments

  • "பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்."
    No, it is not true. Spadigam is Quartz crystal. It is silicon dioxide.
    "இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600, அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்."
    Where did you get this information?
    "ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு."
    No, again not true. Quartz has poor magnetic properties.

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 19/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை சித்திரை – 06

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More

    17 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    19 hours ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    19 hours ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago