Arthamulla Aanmeegam

திருச்சாழல் உருவான கதை | Thiruchalal Story in Tamil

திருச்சாழல் உருவான கதை | Thiruchalal Story in Tamil

சிவபெருமான் மீது தீராக் காதலையும் அன்பையும் செலுத்தி வரும் சிவனடியார்களுள் ஒருவர், தமிழகத்து சிவாலயங்கள் தோறும் ஒவ்வொன்றையும், தரிசித்து வணங்கி வந்தார்.

சுவாமி ஒருவரே- எல்லா இடத்திலும் நீங்கப் பெற இருந்தாலும், அவ்விடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று சுவாமியை வணங்கி விட வேண்டும் என்று அவரது பெரு விருப்பமாக இருந்து வந்தது.

இதனால், தரிசனம் செய்யாத ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் வணங்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள், சிதம்பரம் சென்று திருமூலட்டானேசுவரரையும், சிதம்பரநாதனை, கண்குளிர கண்டும், மனங்குளிர ஆனந்தத்தும் ஊர் திரும்பி வந்து சேர்ந்தார்.

அன்றைய இரவு, சிதம்பர ஆடவல்லானின் தூக்கிய திருவடிகளின் நினைவுகளுடன், உறங்கிப் போனார்.

அன்பனே!, – எல்லா தலங்களுக்கும் சென்று என்னைப் பார்க்கும் நீ, இங்கிருக்கும் என்னைப் பார்க்க, வர எண்ணமில்லையா? எனக் கேட்க……..

ஆனந்தம் மேலிட, விழித்து எழுந்தவர், சுவாமி கனவில் உணர்த்தியதை எண்ணி, புளங்காகிதம் அடைந்தார்.

இலங்கை பாடல் பெற்ற தலம் செல்ல வேண்டும் என்பது அவரது வெகு நாளைய பெரு விருப்பமாக இருந்தது.

இலங்கை செல்ல தன்னை சுவாமி அழைத்தாரோ?, என்று நினைத்து, உடனடியாக இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டார்.

இலங்கைத் தீவிலிருக்கும், ஆலயங்கள் ஒவ்வொன்றாக தரிசித்தார்.

அவர் ஆலயங்களுக்குள் உள் புகுந்ததும், பூமியில் விழுந்து எழுந்து *”பொன்னம்பலமே” “பொன்னம்பலமே”* என்று கூறி கூறி வலம் வந்தார்.

இலங்கைத் தீவானது, பெளத்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது.

இதனால், அங்கு பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வந்ததனால், அவர்கள் பெளத்தர்களாக மாற்றப் பட்டிருந்தனர்.

அரசன் பெளத்தனாக இருந்ததனாலா?, இல்லை அரசனின் மீதான பயமா? எனத் தெரியாத அவர்கள் பெளத்தத்தையே தழுவி இருந்து வந்தனர்.

சிவாலயத்தில் *”பொன்னம்பலமே”* எனக் கூறி தரிசனம் செய்த தமிழக சிவனடியாரைக் கண்ட, பெளத்த குருமார்கள் சிலர், சிவனடியாரின் தோற்றத்தையும், ஓயாமல் அவர் கூறும் *”பொன்னம்பலமே”* திருவாக்கினை கேட்கவும், பார்க்கவும், கண்ட அவர்கள், பொறாமைத் தீயினால் பொருமினர், உடனடியாக அரசனிடம் வந்து முறையிட்டனர்.

வந்து விவரித்த, பெளத்த குருமாரை விட அதிகம் கோபம் கொண்டவராகக ஆனார் அரசர்.

அந்த சிவத்தொண்டரை, இங்கு அழைத்து வரும்படி சேவகர்களுக்கு உத்தரவிட்டார்.

அரசவைக்கு அழைத்து வந்தனர் தமிழக சிவத்தொண்டரை.

அரசர் சிவனடியாரிடம், நீர் பொன்னம்பலமே என்று கூறி வணங்கினீரே!, அவர் உங்களுக்கு பொன் கொடுப்பவரா? எனக் கேட்டார்.

எங்கள் சுவாமி! பொன்னுக்கும் மேலான எதையும் தருபவர் எங்கள் பொன்னம்பலத்தவர் என சொல்லி, தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரநாதனின் அருள் பெருமைகள் முழுவதையும் மொழிந்தது வைத்தார்.

இதனால், எங்கள் நாட்டில், எங்கள் தாய் சமயத்தின் மீது நாங்கள் அனைவரும், பொன்னம்பலத்தவர் மீது உயிராய் கலந்துருகியுள்ளோம் என பெருமிதமாக கூறினார்.

இதைக் கேட்டதும், அரசவையில் இருந்த மூத்த புத்த குரு சினத்துடன் எழுந்து… *”புத்தனே கடவுள்” பெளத்தமே உண்மையானது”* என கத்தினார்.

இருக்கவே இருக்காது!, *சிவனே முதல்வன், சைவமே முதன்மையானது,* என பதிலுக்கு சிவனடியாரும் குரல் கொடுத்தார்.

இல்லை, இல்லை, இது உன்மை இல்லை!, நம்பிக் கெட்டுக் கொண்டிருக்கிறது உங்கள் சமயம் என்றார் பெளத்த குரு.

இல்லை!, உலகுக்கே முதலும் முடிவுமான ஒருவர் பிறப்பில்லாதவர் என்றால் எங்கள் *(கருவூறார்)* சிவபெருமான் ஒருவரே!……(கருவூறார் என்றால் கருவில் உருவாகதவர் என அர்த்தம்.)

மற்றவர் யாவரும் கருவில் உதித்து வந்தவர்களே!, அவர்களுக்கெல்லாம், சிவபெருமான் போல சிருஷ்டிக்கும் தன்மை எதுவும் கிடைக்காது என்று அழுத்தமாக எடுத்துரைத்தார்.

ஏன் கிடையாது?, நாங்கள் அங்குள்ள பொன்னம்பலம் வருகிறோம், பெளத்தம் விதித்த கருத்தை அங்கு விதைத்து, உங்கள் பொன்னம்பலவானின் காற்சிலம்பைக் கழட்டுவோம், நந்திக் கொடியை அறுபடச் செய்வோம், பெளத்தமே உண்மையானதென நிரூபித்து சிதம்பரத்தினின் கோயிலை பெளத்த கோயிலாக்குவோம், பார்க்கலாமா? என்றான் இலங்கை மன்னனின் பெளத்த குரு.

பெளத்த அவையில், தமிழக சிவத்தொண்டர், சிதம்பர நாதனின் அருள்மழைகளை மொழிந்தவைகளைக் கேட்ட போதே, அரசனின் மனவோட்டத்தில் ஒரு வித கிரகிறுக்கம் ஆனது அவரது முகத்தில் தெரிந்தது.

உன்மை எது? பெளத்தமா?, சைவமா? என மன்னனின் மனம் கலவரக் கோலமானது.

விடிந்தால்-, சிதம்பரம் செல்ல வேண்டியதுதான், முடிவு செய்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய கட்டளையிட்டான்.

தமிழக சிவனடியார் கூறியது மட்டும், பெளத்த மன்னனுக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து வந்து அவரது மனத்தை அழுத்தியது.

*பொன்னல்ல….. , பொன்னுக்கும் மேலானதை எங்கள் பொன்னம்பலர் தருவார்!*,…., *பொன்னல்ல, பொன்னுக்கும் மேலானதை எங்கள் பொன்னம்பலர் தருவார்!*,….,

தந்தை தூங்காமல், மனத் தடுமாற்றத்தோடு இருப்பதைக் கண்டாள் மகள்.

பெளத்த மன்னனின் மகள் பிறக்கும்போதே ஊமைத் தன்மையோடு பிறந்தவள், சிறு வயதே அவளுக்கு, அவளால் உணவுக்காக வாய் திறக்க முடியுமே தவிர, நாவிலிருந்து சொற்கள் உருவாகி வாய் வழியே வருவது அற்று இருந்தாள்.

தந்தையிடம் அருகில் வந்து, தந்தையே ஏன் என்னவோ போலிருக்கிறீர்கள் என்பதை கை விரல்களைக் கொண்டு, தலை, கண்கள், நெஞ்சு போன்றவற்றைத் தொட்டு ஜாடையிட்டுக் கேட்டாள்.

நடந்ததையும், நாளை தமிழகம் செல்லப் போவதையும் தந்தை, மகளுக்குப் புரிய வைத்தார்.

உடனே, – மகள் தன் வலக் கையால் மனதை தொட்டுக் காட்டிவிட்டு, தந்தையின் கையையும் பற்றி பிடித்து, மறுகையை தூக்கி நானும் வருகிறேன் என உணர்த்தினாள்.

தமிழகம் புறப்படும் போது, தனது ஊமை மகளோடு, மூத்த பெளத்த குரு, மற்றும் குருவின் சீடர்கள் பலரைச் சேர்த்துக் கொண்டு புறப்பட்டனர்.

சிதம்பரம் ஆலயம் வந்து சேர்ந்த அவர்கள், அங்கேயே அமர்ந்தனர், தீட்சிதர்களை அழைத்து, உங்கள் சிவனடியார்களையெல்லாம் வாதம் செய்ய இங்கு அழைத்து வாருங்கள் என பெளத்த குரு ஒருவர் கூவினார்.

அதற்கு, தில்லை அந்தணர்கள், ஏன்? எதற்கு? என வினவினார்.

உங்கள் அறிஞர்களிடமும், சோழ மன்னன் முன்பும் பெளத்தமே உண்மையான மதம், என்பதை நிரூபிக்க வந்துள்ளோம், என மற்றொரு பெளத்த குருமார் எடுத்துரைத்தார்.

சேதிகளை கேட்ட தில்லை அந்தணர்கள், சோழ நாட்டு மன்னனுக்கு நடந்தவைகளைப் பற்றி ஓலை எழுதி துரிதகதியில் கொண்டு சேர்த்தனர்.

அடுத்து, சிவஞானிகளிடமும், சைவ நூல் அறிஞர்களிடமும் இச்செய்தியைக் கொண்டு சேர்த்தனர்.

சோழ மன்னன் முன்னிலையில் சைவப் பெரியோர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.

தர்க்கத்தையே பலமாக பிடித்து வைத்திருக்கும் பெளத்தர்களோடு வாதத்தில்
வெல்ல நம் மாணிக்கவாசகப் பெருமான் ஒருவரே தகுதியானவர் என்றும், மாணிக்கவாசகரையே வாதத்தில் கலந்து கொள்ள தகுதியானவர் என முடிவு செய்தனர்.

உடனே மணிவாசகப் பெருமான் இப்போது எங்கிருக்கிறார் என அறிந்து வர ஆட்களே அனுப்பினார் மன்னர்.

மணிவாசகப் பெருமான் வனத்தில் தவத்தில் ஈடுபட்டிருக்கிறார், பெருமானை விழித்தெழச் செய்ய மனமில்லாமல் திரும்பி வந்து விட்டோம் என்று சென்று வந்தவர்கள் கூறினார்கள் மன்னரிடம்.

தவத்திலிருப்பவரை என்ன சொல்லி விடுவிப்பது?, இதற்கேனும் வேறு வழி உளதா என்றார் மன்னர்.

அதற்கு அந்தணர்கள், – தவப் பயணத்திலிருந்து, ஒருவரை விடுவிக்க, நாம் எதைச் சொல்லி முனைப்பெடுத்தாலும் பாவமே!, இதற்கு ஒரே வழி-, நம்மில் சிலர் அவர் முன் *ஐந்தெழுத்து மந்திரம்* ஓதி விழிப்புணர்வு நிலை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

அந்தணர்கள் பலர், மணிவாசகர் முன் அமர்ந்து ஓதினர், *திருவைந்தெழுத்து ஓதலின்* விழிப்பு கொண்டு, தவ நிலையை விட்டுக் கடந்து வெளியே வந்தார் மணிவாசகப் பெருமான்.

நடந்த விபரங்களை அனைத்தையும், மணிவாசகப் பெருமானிடம் கூறினார்கள், எனவே பெளத்தர்கள் வைக்கும் வாத தர்க்கங்களை, அவர்களின் குருமார்களோடு தாங்களே அந்தத் தீர்க்கத்தை வென்று தர வேண்டும் என்று வேண்டினார்கள்.

சபை கூடியது.

முதலாவதாக பெளத்தத்தின் சமய நெறி உண்மைகளை பட்டியலாக படித்தனர் பெளத்தர்கள்.

புத்தரின் போதனைகளையும் அதன் அரு பெரு வீரியத்தையும் கூறினார்கள்.

அவர்கள் கூறும் நெறியையும், போதனையையும் கேட்டு, அதை முதலில் மறுத்து வாதம் செய்தார் நம் மணிவாசகப் பெருமான்.

அதன்பிறகு, சிவபெருமானின் பெருமைகள், லீலைகளை காட்டி விளக்கி, சைவ சமய உண்மைகளை உவமைக் காரணங்களோடு எடுத்து வைத்தார்.

மணிவாசகப் பெருமான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதார உவமைக்கும், பெளத்த குருமார்களின் ஒவ்வொரு வாதமும் தோல்விச் சருக்கினை பெற்றனர்.

இதன்பின், பெளத்த குருமார், தோல்விகளைப் பொறுக்க மாட்டாமல், அநாகரிகமான வார்த்தைகளை உபயோகத் தொடங்கி விட்டார்.

முடியாதவனோ, ஒரு தன்மையும் இல்லாதவனோதான், கடைசியில் எடுக்கும் முடிவு இதுதான். அநாகரீகமாக நடந்து கொள்வதென்பது இதுதான். அதைத்தான், இந்த பெளத்த குருமார்கள் கடைசி அஸ்திரமாக எடுத்தார்கள்.

தன்னை எப்போதும் குறைத்துக் கொண்டும், குரைக்கும் நாயிலும் கீழாக, தன்னைத் தாழ்த்திக் கொண்டும் இருப்பவர் நம் மணிவாசகப் பெருமான்.

அப்படிப்பட்ட மணிவாசகப் பெருமான், தன் தாய் சமயம் கீழ்படவோ, ஆட்கொண்டாரை தீது சொல் கேளவோ விடுவாரோ?.

எனவே, ஆட்கொண்டாரை மனத்தால் தியாக்க, சிவபெருமான், மணிவாசகப் பெருமானுள் உள்ளத்துள்ளாக இருந்து, வார்த்தைகள் பிறந்தது.

மணிவாசகப் பெருமான் திருவாக்கிலிருந்து, *அநாகரீக வார்த்தை உதிர்த்த பெளத்த குரு ஊமையாகிப் போகுக!* என்றார்.

பெளத்த குரு ஊமையானார், வாயைத் திறந்து எதோ கூற முனைந்தார் வார்த்தைகள் இல்லை.

இதைக் கண்ட பெளத்த மன்னர் அதிர்ந்தார். ஏற்கனவே இலங்கையிலேயே சிவனடியார் உவமைத்த வரிகளிலேயே மனவோட்டத்தை இழந்து கிரகித்துப் போயிருந்தவர்,- இப்போது நடந்த சம்பவத்தை கண்ணுற்று, வாய் இருந்தும் ஊமையாகிப் போனார்.

பெளத்த குரு ஊமையான விதம், இதில் உன்மை எங்கே என்பதை உணர்ந்த பெளத்த மன்னன், மணிவாசகப் பெருமான் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினான்.

பின் எழுந்த மன்னன் மணிவாசகப் பெருமானிடம், தீது பேசியவர் ஊமையைப் பெறுவது திண்ணமானால், பாவமறியா இந்தச் சிறுமியின் பிறவி ஊமையைப் போக்க முடியுமோ? என்றார்.

முடியும்! என்றார் மணிவாசகப் பெருமான்.

மணிவாசகப் பெருமானுக்கு திருவடி தீட்சை பெற்றது முதல், அவர் தனக்கென பெருமானிடம் என்ன வேண்டியுள்ளார்.

ஒரு வேண்டுதலையும் எம்பெருமானிடம் வேண்டிக் கொண்டதில்லை!- காணும் அருளைத் தவிர வேறு எந்த வேண்டுதலும் அவரிடத்தில் வைத்தது இல்லை.

ஒவ்வொரு பொழுதும், ஆட்கொண்டாரை காண நினைந்தேன் என்றுதான், பாடிப் புலம்பியிருக்கிறார், அழுதிருக்கிறார்.

திருவாசகத்தில், திருப்புலம்பலில்- *கரைந்துருகும் பேரன்புன் கழலிணைக்கே கற்றாவின் மனம்போ*,

*திருந்தும்வகை யெனக்கருள்க வெனக்கேட்ட றிருப்புலம்ப லாகு முள்ளம்* என புலம்புவார்.

போற்றித் திருவகவலையும் எடுத்துப் படித்தால்…..
*குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி, புரம்பல வெரித்த புராண போற்றி, பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி, போற்றி போற்றி புயங்கப் பெருமான், போற்றி போற்றி புராண காரண, போற்றி போற்றி சயசய போற்றி* என்று 159 இடங்களில் சுவாமியைப் போற்றுவார்.

படிக்கும்போது நமக்கு அழுகை வரும். வாழ்க்கையில ஆலயம் போனாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி, வேலைப் பணிகளுக்கூடவேயும் சரி போற்றித்திருவகலை ஒவ்வொருவரும் மொழிந்து கொண்டே இருக்க வேண்டும்.

திருவாசகத்தை எவர் ஒருவர் வாசிக்கிறாரோ, அவரிடமிருக்கும் பீடை பிணிக்கெல்லாம் விடை கிடைக்கும்.

மணிவாசகப் பெருமான், திருவாசகத்திலுள்ள திருப்புலம்பலை எப்படிப் பாடி புலம்பியிருப்பார் நினைத்துப் பார்த்து உணர்ந்து அழுது பாட வேண்டும்.

திருவாசகத்தை இதுவரை கையில் ஏந்தாதவர்கள், நாளை முதலாவது-, திருவாசகத்தை கையில் எடுக்கிறார்களா பார்க்கலாம்.

பாடலைப் பாடும்போது,
அழுதார் மனம் பொறாதவர் நம் சிவபெருமான், விடுவாரா?, நம் மணிவாசகப் பெருமானின் மனச் சீண்டுதலை விட்டாரா?.

மணிவாசகப் பெருமானின் அரற்றை ஏற்றுக் கொண்டு அவருள் அருளென மனத்துள் புகுந்து கொண்டார்.

ஊமைப் பெண் பேசுவதற்கு, மணிவாசகப் பெருமானின் திருநாவில் திருவாக்க வந்தமர்ந்தார்.

ஆட்கொண்டார் திருவருளுடன், மணிவாசகப் பெருமான், பெளத்த மன்னரின் மகளான ஊமைப் பெண்ணுக்குப், பேசும் திறத்தை அளித்துவிட்டு அமைதியாக இருந்தார்.

பேசும் திறன் பெற்ற அவளும், தந்தையார் அருகில் நின்று, வாதங்களையும், தர்க்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது– பெளத்த குருவுடன் வந்திருந்த இருபது சீடர்கள், சமயம் தொடர்பான நுட்பமான இருபது கேள்விகள் எங்களிடம் உளது, இதற்கும் பதிலுரைப்பு வேண்டும் என்றனர்.

ஊமைக்கு பேச்சு வந்தது என்பதை நீங்கள் உணரவும், உங்களின் இருபது கேள்விகளுக்கும், ஊமையாகிருந்த இப் பெண்ணே பதிலளிப்பாள் என்றார் மணிவாசகப் பெருமான்.

பெளத்த மகளைப் பார்த்த மணிவாசகப் பெருமான், உம்மவர்கள் கேட்கும் இருபது கேள்விகளுக்கும் நீயே பதிலளி! என ஊமைப் பெண்ணிடம் சொன்னார்.

பெளத்த குருவின் சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஊமைப் பெண்ணும், அதன் உண்மைகளும் நுட்பங்களும் பொருந்தியபடி பதில் தந்து பேசினாள்.

பெளத்த மன்னன் உள்பட உடன் வந்திருந்த அணைவரும் திகைத்து அதிர்ந்தனர்.

இதன்பின்பு, பெளத்த மன்னனும், அங்கிருந்த புத்த குருவும் அவருடன் வந்திருந்த சீடர்களும் எங்களுக்குள்ள மன அழுக்கு நீங்கிப் போனது என்றார்கள்.

அனைவரும் மணிவாசகப் பெருமானிடம் திருவடி பணிந்தார்கள்.

அவர்கள் அனைவருக்கும், மணிவாசகப் பெருமான் திருநீறு அளித்தார்.

திருநீறு பெற்ற பெளத்த மன்னன் உட்பட, பெளத்த சீடர்கள் அனைவரும், நெற்றியில் திருநீறு தரித்துக் கொண்டு அனைவரும் சிவமதம் சார்ந்தனர்.

பெளத்த சீடர்கள் கேட்ட இருபது கேள்விகளுக்கு , இலங்கை மன்னன் புதல்வி ஊமைக் குறை நீங்கி இருபது கேள்விக்கான விடைகளையும் கூறியதை, அவ்விடைகளைக் கோர்த்தமைத்து திருவாசகத்தில் *திருச்சாழல்* என்னும் தலைப்பில் இருபது பாட்டுக்களை மாணிக்க வாசகர் அருளிச் செய்தார்.

திருச்சிற்றம்பலம்.🙏

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோயில்கள்

சிவாஷ்டகம் பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More

  4 weeks ago

  Today rasi palan 28/5/2022 in‌‍‌ tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக்கிழமை வைகாசி – 14

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group II. *🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* *பஞ்சாங்கம்… Read More

  9 hours ago

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023

  Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More

  1 month ago

  Mesha rasi Guru peyarchi palangal 2022-23 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More

  1 month ago

  Rishaba rasi Guru peyarchi palangal 2022-23 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

  1 month ago

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

  Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

  1 month ago