கிரக நிலைகள் உணர்த்தும் திருமண சிக்கல்களும் பரிகாரமும்
கீழ்க்கண்ட கிரக அமைப்பு உள்ள ஜாதகங்களில் ஏற்படும் திருமணச்சிக்கல்களுக்கு உரிய பரிகாரம்.
- சந்திரனை சனி பார்த்தல். பரிகாரம் – சனிக்கிழமை அன்னதானம்
- ஏழாம் அதிபதியை சனி பார்த்தல் – பரிகாரம் குலதெய்வ வழிபாடு
- சுக்கிரனை சனி பார்த்தல் அல்லது சேர்தல் – பரிகாரம் சுமங்கலி பூஜை
- செவ்வாய் கிரகத்தை சனி பார்த்தல் அல்லது சேர்தல் – பரிகாரம் சஷ்டி அன்று முருக வழிபாடு
- ஏழாம் அதிபதியுடன் ராகு அல்லது கேது நெருங்கி இருத்தல். பரிகாரம் ராகு காலத்தில் துர்கா வழிபாடு
- சூரியன் சுக்கிரன் பாகை இடைவெளி 42 மேல் இருத்தல் (திருமண வாழ்வில் கசப்பு, புத்திர பேறு தாமதம் கூட ஏற்படும்) – பரிகாரம் சுமங்கலி பூஜை
- சுக்கிரன் மூன்று பாகைக்குள் அஸ்தங்கம் பெறல். – பரிகாரம் சுமங்கலி பூஜை
- ராகு அல்லது கேது லக்கினத்திற்கு 2, 7, 8 ல் இருந்து, ராகு அல்லது கேது அமர்ந்த வீட்டின் அதிபதி அஸ்தங்கம், வக்கிரம், கிரகணம் அடைதல். பரிகாரம் ராகு காலத்தில் துர்கா வழிபாடு
- செவ்வாய் ராகு கேதுவுடன் மிக நெருங்கி இருத்தல். பரிகாரம் சஷ்டி அன்று முருக வழிபாடு
- செவ்வாய் / சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சனி பலமுடன் இருத்தல். பரிகாரம் சஷ்டி அன்று முருக வழிபாடு
- சுக்கிரன் வக்கிரம் பெறல். பரிகாரம் சுமங்கலி பூஜை
- பெண்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்ந்து, செவ்வாய் அஸ்தங்கம் அடைதல். பரிகாரம் சஷ்டி அன்று முருக வழிபாடு
- செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இருத்தல். பரிகாரம் சஷ்டி அன்று முருக வழிபாடு
- சுக்கிரன் திரிகோணத்தில் கேது இருத்தல். பரிகாரம் சுமங்கலி பூஜை
இங்கே குறிப்பிட பட்டு இருக்கும் ஏதேனும் ஒரு கிரகத்தின் மேல் குரு பார்வை இருக்க அல்லது இங்கே ஏதேனும் ஒரு வக்கிரம் பெறாத கிரகம், வக்கிரம் பெற பலன் மாறும்.
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள்
