Arthamulla Aanmeegam

Tulasi health benefits in tamil | மூலிகை நிறைந்துள்ள துளசி

Tulasi health benefits in tamil

இந்த பதிவு மருத்துவ தன்மை வாய்ந்த துளசி (Tulasi health benefits) பற்றியது… இதனை ஒரு நல்ல மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகே உங்களுடைய உடல் உபாதைகளுக்கு பயன் படுத்தப்பட வேண்டும்….

‘‘தெய்வீகத்தன்மை கொண்ட செடியாக வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு பூஜிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். துளசி மணி மாலையை அணியும் பழக்கத்தை நம் முன்னோர் பின்பற்றியதையும் பார்த்திருப்போம். பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்று கோயில்களில் அதிகம் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம். இதுபோல் ஆன்மிக வழிபாட்டுக்கான செடி மட்டுமே அல்ல துளசி. அதில் ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவகுணங்களும் அடங்கி இருக்கிறது’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வித்யாலட்சுமி, துளசியின் வகைகளையும், அதன் மருத்துவ ரீதியான பயன்களையும் இங்கே பட்டியலிடுகிறார்.

‘‘துளசியில் வெண்துளசி, கருந்துளசி என இருவகைகள் உள்ளன. இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்றும் கூறுவார்கள். காட்டுப் பகுதிகளில் இன்னும் பலவகை துளசிசெடிகள் உள்ளன. உலகமெங்கும் துளசி செடிகள் இருந்தாலும் இந்தியாவில் வளரும் துளசி வகைகளை கிருஷ்ண துளசி, ராம துளசி, பபி துளசி(Babi Tulasi), துருத்ரிகா துளசி(Drudriha Tulasi), துகாஸ்மியா துளசி(Tukashmiya Tulasi) என்று வகைப்படுத்துகிறார்கள்.

இதில் கிருஷ்ண துளசி தொண்டை நோய்கள், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் மற்றும் சருமம் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. குஷ்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள ராம துளசி அதிக நறுமணம் உடையது. இது வங்காளம், சீனா, பிரேசில் போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.

பபி துளசி சமையலில் சுவை மற்றும் நறுமணத்துக்காக சேர்க்கப்படுகிறது. துருத்ரிகா துளசி சளி மற்றும் தொண்டை வறட்சிக்கு நிவாரணியாக உள்ளது. இது சதைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுவதால், வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த வகை துளசி நேபாளம், வங்காளம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

துகாஷ்மியா துளசி தொண்டை கோளாறுகள், குஷ்ட நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. இந்த துளசி உடல் எலும்புகளுக்கு வலுசேர்க்க பெரிதும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஐந்து துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Eugenol என்கிற வேதிப்பொருளை உள்ளடக்கியது Eugenol Type Tulasi. இந்த வேதிப்பொருள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது குடலின் தசைகளை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, வெண்குஷ்டம், விஷமுறிவு, பூச்சிக்கடி போன்றவற்றுக்கு நிவாரணியாக உள்ளது. தலையில் ஏற்படக்கூடிய பூஞ்சை பாதிப்புகள் மற்றும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதோடு, வலி நிவாரணியாக உள்ளது. Anti Viral, Anti Parasitic, Anti Oxident, Anti Insect போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது இந்த வேதிப்பொருள்.

நுரையீரலில் சளி தொந்தரவுகளால் ஏற்படக்கூடிய Lung Congestion பிரச்னைக்கு நிவாரணியாக இருப்பதோடு, Oxidative stress குறைவதற்கு உதவுகிறது. இந்த Oxidative stress உடலில் அதிகரிப்பதால்தான் இளமையில் முதுமை, உடல்வலு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

Flavonoids, Proline, Ascorbate போன்ற சத்துப் பொருட்கள் இருப்பதால், Anti Oxidant ஆக செயல்படுகிறது. மேலும் துளசி Anti Oxidant ஆக செயல்படும் Glutathione என்கிற சத்துப் பொருளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. துளசியில் உள்ள Caryophyllene என்கிற வேதிப் பொருள் Anti Inflammatory, Anti Fungal, Anti Aging, Decreases Cytotoxicity போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

Citronellol, Myrcene, Limonene, Camphene, Anothole, Cimeole போன்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நீரிழிவு, ஆஸ்துமா நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. Citronellol பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. Camphene, Cineole போன்றவை Lung Congestion பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. துளசியில் உள்ள அசிட்டிக்அமிலம் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது.

சுக்கு, மிளகு, திப்பிலியுடன் (திரிகடுகு) ஒருபிடி துளசியை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி, இருமலை கட்டுப்படுத்துவதோடு, உடல் சோர்வும் நீங்கும். மேலும் இது சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. துளசியுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சிறிதளவு கிராம்புதூள், பச்சை கற்பூரம், உப்பு கலந்து துளசியை பல்லில் வைப்பதால் பல் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் குறைகிறது.

துளசி சுவாசத்தில் புத்துணர்வை அளிப்பதோடு, வாய் துற்நாற்றத்தைப் போக்குகிறது. இதய சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் படை நோய்க்கு, துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றை சம அளவு சேர்த்து படை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

துளசியுடன் ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கத்தைச் சேர்த்து ஒன்றாக அரைத்து தலையில் பற்று போடுவதால் தலைவலி குணமாகிறது. துளசி இலையை கசக்கி அதை உடலில்தடவினால் கொசு நம்மை நெருங்காது. தேள் கடிக்கு உடனடியாக துளசியை மென்று சாப்பிடுவதோடு, கடிபட்ட இடத்தில் துளசியை கசக்கி தடவ விரைவாக நிவாரணம் கிடைக்கிறது’’

நன்றி: Whatsapp Group

துளசிச் செடியை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்

துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

 

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    7 seconds ago

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil

    ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More

    7 days ago

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

    பகவான் ஶ்ரீ  கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் ..   1. மகாவிஷ்ணு எடுத்த… Read More

    3 weeks ago

    Mahalakshmi 100 Special Information Tamil | மஹாலக்ஷ்மி வசிக்கும் 100 !

    Mahalakshmi 100 Special Information in Tamil மகாலட்சுமி (Mahalakshmi prayer benefits) தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி,… Read More

    4 weeks ago

    108 Ayyappan Saranam | 108 Saranam in Tamil | 108 ஐயப்பன் சரணம்

    108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்பன் சரண கோஷம் சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும்… Read More

    2 weeks ago

    Sashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத பலன்கள்

    Sashti viratham கந்த சஷ்டி விரதம் 2025 பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம்… Read More

    5 days ago