Ullangai Ragasiyam
உள்ளங்கை ரகசியம் மற்றும் சக்திகள் | Ullangai Ragasiyam
கொடுக்கப்பட்ட சக்திகளும், வேண்டி பெறப்பட்ட சக்திகளும், பூமியில் தோன்றுகிற அனைத்தும் இந்த பூமிக்கே சொந்தம் . அன்னை பூமாதேவி அனைத்தையும் ஆளக்கூடியவர், தாங்கக்கூடியவர், எந்த சக்தியையும் இழக்கக்கூடியவரும் இவரே . அழியும் எதுவும் மண்ணுக்கே போகும், மண்ணில் விளைந்ததை உண்டு வாழும் மனிதனாயினும் மண்ணுக்கே சொந்தம், ஆத்மா என்னும் நாராயணன் உள்ள வரை பூமாதேவி மனிதனை தின்னாமல் விட்டு வைப்பார் , (ஆத்மா பிரிந்த பின் உடல் எரிந்தாலும் சாம்பல் மண்ணில்தான் புதைய வேண்டும்) அதுசரி அன்னை பூமாதேவியை பற்றி இங்கு கூற காரணம் என்ன என்று கேட்கத் தோன்றும் அல்லவா அறியுங்கள் – அன்னை பூமாதேவி சத்தியத்திற்கு கட்டுப்பட்டவள் எதையும் நாம் கொடுக்காமல் எடுக்கமாட்டாள்,
வாண சக்தியை மட்டும் நாமறியாமலேயே எடுத்துக்கொள்வார், (அதனால் தான் பிரபஞ்ச ஆற்றலை பெற்றவர்கள் பாத அணி இல்லாமல் நடக்க மாட்டார்கள்) அன்னை பூமாதேவிக்கு நாமாகக் கொடுக்கக்கூடியதாக ஒருமுறை உண்டு அது நம் இரு உள்ளங்கையையும் நன்கு பதியும்படி பூமியில் வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை எடுத்துக் கொள்வார், அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலம் சரி, ஞான சக்தி ஆனாலும் சரி எடுத்துக் கொள்வார், ஒட்டு மொத்தமாக எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் எடுத்துக்கொள்வார், பாவத்தினால் அதிகமாக சிரமப்படுவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல் பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள், அதற்கு பலிபீடம் என்று பெயர், (இன்றைக்கு இந்த பலிபீடத்திற்கு ஏதேதோ விளக்கம் கூறுகிறார்கள், நம் கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யும் இடமாகும், மனதால் விடமுடியாத பாவங்களை தன் உள்ளங்கையால் விடமுடியும், மனதால் தாங்க முடியாத துன்பத்தை தன் உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும், எனவே ஆலயங்களில் இந்த
பலிபீடம் முக்கியம் வாய்ந்ததாகும், அதே போல் சாப்பிடும்போது நம் கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நம் சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் சாமி கும்பிட்டபின் விழுந்து கும்பிட்டபின் இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம், ( விழுந்து கும்பிடும்போதும். இரு உள்ளங்கையும் ஒன்றோடு ஒன்று ஒட்டினார்போல் கை வைத்து வணங்கி பின் கால் பலத்தால் எழலாம் அல்லது கை விரல்களின் பின்முட்டியால் ஊனி எழலாம்) பலரும் பல புண்ணிய ஆலயம் சென்று வந்தாலும் பலனில்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விழுந்து வணங்கி எழும்போது உள்ளங்கை ஊனி சக்தியை பூமிக்கு தாரை வார்த்து கொடுப்பதே அதற்கு காரணமாகும், ஆலயம் சென்றவுடன் பலிபீடத்தில் உள்ளங்கை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு திரும்பும்போது எங்கும் கை வைக்கக்கூடாது, உள்ளங்கையில் அவ்வளவு சக்தி நிறைந்துள்ளது .
மங்களவன் என்னும் செவ்வாயின் இடம் இந்த உள்ளங்கை தான் . அதில் எதை செய்தாலும் பெருகும், ஆலயத்தில் பிரசாதம். தீர்த்தம். விபூதி குங்குமம் அனைத்தும் உள்ளங்கையால் வாங்கியே சாப்பிடுகிறோம், ( நுனி விரலாம் சாப்பிடமாட்டோம் அது தவறு ) விபூதியாய் இருந்தாலும் விரலால் எடுத்து இட்டுக் கொள்ளாமல் அப்படியே எடுத்து பூசிக் கொள்ளும் பழக்கம் அப்போதைக்கு உண்டு .
இன்றைய காலத்தில் அலங்கார முகத்தில் விபூதி பூசினால் அழகு போய்விடும், விரலால் விபூதி வைத்து உள்ளங்கை சக்தியை பெற தவறுகின்றனர், தீர்த்தம் மட்டும் தான் உள்ளங்கையால் சாப்பிடுகிறார்கள், ஆக உள்ளங்கை மூலம் அன்னை பூமாதேவி சக்தியை உறிஞ்சி விடுவாள், அநாவசியமாக சத்தியம் பூமியில் அடித்து செய்யக்கூடாது என்பார்கள், அதுவும் இதற்குத்தான், இந்த பூமிக்கும் நமக்கும் சம்மந்தப்பட்ட உடல் பாகம் நம்முடைய மோதிர விரல்தான் (மற்ற பாகங்கள் உள்ளே மறைந்துள்ளன), நம் முன்னோர்கள் ஒரு உபாயத்தை கண்டுணர்ந்தனர், மோதிர விரலில் ஒரு கட்டு இருந்தால் நம் உள்ளங்கை பூமியில் பட்டாலும் சக்தி விரையமாகாது என்பதை கண்டுணர்ந்தனர், அதன்படி மோதிரம் அணியும் முறை வந்தது . இந்த விரலில் கட்டு இல்லாமல் ஆகாய சக்திக்கு நாம் எதையும் கொடுக்க முடியாது . அதனால் தான் நம் பித்ருக்களுக்கு புண்ணியதானம் கொடுக்கும்போது தர்பையால் பவித்ரம் (மோதிரம்) மோதிர விரலில் அணியும் முறையும் கூடுதலாக கையாளப்பட்டது . கை மணிக்கட்டில் கட்டுப் போட்டாலும் பூமி நம் சக்தியை உறிஞ்சாது . பூமி நம் சக்தியை உறிஞ்சுவதால் பாவம் மட்டும் போனால் பரவாயில்லை, புண்ணியமும் சேர்ந்து போய்விடும், இதுதான் பிரச்சனை, எனவே தான் பெரியவர்கள் மோதிர விரலில் ஒரு வளையமாவது இருக்க வேண்டும் என்றார்கள், சக்திகளை தூண்டக்கூடியதும் வெளியேற விடாமல் தடுக்கக் கூடியதும் மோதிர விரலே . அது நிலம் என்றும் சூரியன் என்றும் பெயர் உண்டு,
பெண்களுக்கும் ஆண்களுக்கும் மெட்டி கால் மோதிர விரலில் அணியும் பழக்கமும் இந்த கை மோதிர விரல் பழக்கத்தால் வந்ததே, எனினும் உள்ளங்கால் பூமியில் பதிவதால் சக்தி ஆன்மிக சக்தி பெற்றவருக்குத்தான் உறிஞ்சும், சாமான்யருக்கு உறிஞ்சாது . அப்படி இருந்தும் ஏதாவது ஒரு காலில் கருப்பு கயிறு. கால் மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள், சாமான்யர்கள் மெட்டி போட்டுக் கொள்வார்கள் அல்லது இருக்கப்பட்டவர்கள் கையில் மோதிரம் அணிந்து கொள்வார்கள், இப்பழக்கமெல்லாம் இன்று நாகரிக விஷயமாக பலமாற்றங்கள் உண்டானாலும் பூமி தன் சக்தியை குறிப்பாக சுப சக்தியை உறிஞ்சாமல் பாதுகாக்க பயன்கொள்ளப்பட்டதே ஆகும் .
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க ஆலயத்தில் பலபீடம் மூலம் பாவத்தை போக்க எத்தனித்தாலும். சத்தியம் செய்வதானாலும். மாந்திரிக சக்தி வேலை செய்ய வேண்டுமானாலும் கை. கால். மணிக்கட்டுகளில் எந்த மோதிரமும் இருக்கக் கூடாது இல்லையேல் பலன் அளிக்காது , பெண்கள் மெட்டியை கழட்ட அஞ்சுவார்கள், அதனால் அக்காலத்தில் புது மெட்டி மாற்றும் தருவாயில் பலிபீட பிராத்தனை செய்து வணங்கி பின் புது மெட்டியை அணிந்து கொள்வார்கள், யாவரும் இந்த முறையை கடைபிடிக்கலாம், கைகளில் சூரிய விரலில் மோதிரம் இருந்தால் எதிரியின் மாந்திரிக சக்தி கூட அவ்வளவு எளிதில் வேலை செய்யாது , மணிக்கட்டில் செம்பினால் ஆன ஒரு வளையம் அணிந்திருந்தால் ஒருவர் சாபம் கூட எளிதில் அண்டாது , இது ஆண்களுக்கு பொருந்தும், பெண்களுக்கு காலில் தண்டை அல்லது கொலுசு அணிவதால் தடுக்கலாம், அக்காலத்தில் ஒரு காலிலாவது வசதிக்கேற்றவாறு தண்டை அணியும் பழக்கம் இருந்தது , இந்த பழம் பெரும் தகவலை உங்களுக்கு கூற காரணம் இந்த முறையில் பலர் தான் பெற்ற சுப சக்திகளை விரையம் செய்கின்றனர், அதற்காகவே இந்த எச்சரிக்கை .
உள்ளங்கை ஒரு வசிய பீடம் போன்றது , ஒருவரோடு ஒருவர் கை குலுக்கினால் கூட சக்தி பரிமாற்றம் உண்டாகும், கோபமாக கை குலுக்கினால் வக்ர குணம் உண்டாகும், அன்பாய் குலுக்கினால் நட்பு வசியமாகும், அதே போல் தூங்கும்போது கன்னத்திலோ. தலையிலோ உள்ளங்கை வைத்தால் மூதேவி நம்மிடம் குடிகொள்ளும், அதுவே யோசனை செய்யும்போது உள்ளங்கை தலையில் வைத்தால் ஞானம் பெருகும், சூரியனுக்கு நேராக நம் உள்ளங்கையை காண்பித்து பின் உச்சந்தலையில் வைத்தால் ஆற்றல் சக்தி உண்டாகும், உள்ளங்கையில் தண்ணீர் ஊற்றி ஆசீர்வதித்தாலும் பலிக்கும், சாபம் கொடுத்தாலும் பலிக்கும், ஏன் இந்த உள்ளங்கைக்கு மட்டும் இத்தனை சக்தியெனின் முப்பெரும் தேவியரும் சங்கமிக்கும் இடம் இவ்விடமே, இந்த மூவருக்கும் பூமாதேவியுடன் இணையும்போது உடல் சக்தி உறிஞ்சப்படும் இதன் மூலமாகவும் சுப சக்தியான மகாலட்சுமியை இழக்கக்கூடும் கவனம் .
புராணத்தில் கூட ஸ்ரீ மகாவிஷ்ணு மோதிரத்தை பூமியில் வைத்து வைகையை உற்பத்தி செய்ததாக புராணம் கூறுகிறது, ஏனெனில் மோதிர விரல் பூமியுடன் தொடர்பு உள்ளதை சுட்டிக்காட்டுகிறது, உள்ளங்கை யார் தலையில் படுகிறதோ அது தீட்சையாகும், அதனால்தான் அநாவசியமாக யார் தலையிலும் கை வைக்கவோ. விடவோ கூடாது என்பார்கள், உள்ளங்கையில் விட்டு குடிக்கும் நீர் கூட நோயை போக்கும் சக்தியை கொடுக்கும் மந்திர நீர் ஆகும், தர்மம் கூட உள்ளங்கையில் இட்டால் கொடுத்தவரை விட வாங்கியவருக்கு சக்தி போய்விடும், அதனால் தான் பாத்திரத்தில் தான் பிச்சை இட வேண்டும், கையில் தரக்கூடாது என்பார்கள், ஒரு தாயின் கையால் நம் உள்ளங்கையால் அன்னம் வாங்கி சாப்பிட்டாலோ. பணம் பெற்றாலோ சக்தி பன்மடங்காக பெருகும் என்பதால் தாயின் கையால் சாப்பிடுவார்கள், காரணம் சக்தி கூடும் என்பதால் தான் (இந்த ரகசியத்தை அறிந்த காலத்தில் வெறும் கையாலே அன்னமிடும் பழக்கம் இருந்தது,
அன்னவெட்டியெல்லாம் அன்னியருக்குத்தான், இன்று மகத்துவம் புரியாமல் எல்லாமே ஸ்பூனாகி போனது), எவர் கையால் நாம் உணவு வாங்கி சாப்பிட்டாலும் நாம் அவருக்கு துரோகம் செய்தால் நாம் அழிந்து போவோம், காரணம் உள்ளங்கை சத்தியத்திற்குரியது , அதனால் அன்னம் இடும்போது அந்த உள்ளங்கையால் எடுத்த அன்னத்தில் சத்தியம் கலந்திருக்கும் நாம் இட்டவருக்கு கட்டுப்பட்டவராவோம், அதனால் அவர் இடும் சாபமோ நாம் அவருக்கு செய்யும் துரோகமோ நமக்கு துன்பத்தை தருகிறது. அக்காலத்தில் இதற்காக பாடல்களே கூட பாடப்பட்டது . அன்னமிட்ட வீட்டில் கண்ணக்கோள் சாட்டினாள். மண்ணோடு மண்ணாக போவாய் என உரைத்தனர். இந்த சக்தி தாய்க்கு அதிகம் இருக்க காரணம் தன்பிள்ளைகளுக்கு அதிகமாக அன்னம் படைக்கும் வாய்ப்பும், தலையில் கை வைக்கும் வாய்ப்பும் அதிகமாக ஒரு தாய்க்கே கிடைக்கிறது . அதனால் தான் தாய் மகனை சபித்தாள். அப்படியே பலிக்கிறது . இவ்வளவு மகத்துவம் மிக்க உள்ளங்கை பூமியில் பட்டால் மட்டும் அனைத்தும் பறிபோய்விடும். ஏன் தெறியுமா இந்த உடல் வளர்ந்தது இந்த பூமியால்தான். நம்மை சுமப்பதும் இந்த பூமிதான். எனவே நம் சக்தியை உறிஞ்சும் அத்தனை உரிமையையும், பூமாதேவிக்கு உண்டு.
எனவே இந்த சக்தியை கொடுப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது . பூமியில் உள்ளங்கை பதியும் போது (ஆலய பலிபீடம் தவிர்த்து மற்ற இடங்களில்) முதலில் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தி மங்களகரமான சக்திகளே. காரணம் பூமாதேவிக்கும் மங்களசக்தி மகாலக்ஷ்மிக்கும் நெருங்கிய உறவு உண்டு. அதுவே காரணமாகும். இந்த விரிவான அத்தியாயம் ஏனெனில் இந்த முறையிலும் நீங்கள் செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே கூறியுள்ளேன். வளம் பெறுவீராக..
உடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள்