Lyrics

ராமர் 108 போற்றி| 108 ஸ்ரீ ராமர் போற்றி | 108 rama potri | 108 rama namam

ராமர் 108 போற்றி| 108 ஸ்ரீ ராமர் போற்றி | 108 rama potri | 108 rama namam

இந்த ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும்.

1 ஓம் அயோத்தி அரசே போற்றி
2 ஓம் அருந்தவ பயனே போற்றி
3 ஓம் அச்சுதானந்தகோவிந்த போற்றி
4 ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி
5 ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
6 ஓம் அறத்தின் நாயகனே போற்றி
7 ஓம் அன்பின் இதயம் உறைவோய் போற்றி
8 ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
9 ஓம் அழகு சீதாபதியே போற்றி
10 ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி

11 ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி
12 ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி
13 ஓம் அற்புத நாமா போற்றி
14 ஓம் அறிவுச்சுடரேபோற்றி
15 ஓம் அளவிலா குணநிதியே போற்றி
16 ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
17 ஓம் அரக்கர் க்குகூற்றே போற்றி
18 ஓம் அனுமன் அன்பனே போற்றி
19 ஓம் அன்பு கொண்டாய் போற்றி
20 ஓம் அனந்த கல்யாண குணா போற்றி
21 ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி
22 ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
23 ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
24 ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி
25 ஓம் ஆத்மசொரூபனே போற்றி

26 ஓம் ஆதிமூலமே போற்றி
27 ஓம் இளையவன் அண்ணலே போற்றி
28 ஓம் இன்சுவை மொழியே போற்றி
29 ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
30 ஓம் உண்மை வடிவமே போற்றி
31 ஓம் உத்தம வடிவே போற்றி
32 ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி
33 ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி
34 ஓம் ஊழி முதல்வா போற்றி
35 ஓம் எழில் நாயகனே போற்றி

36 ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி
37 ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி
38 ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
39 ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
40 ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
41 ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
42 ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
43 ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி
44 ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
45 ஓம் கருப்பொருளே போற்றி
46 ஓம் கரனை அழித்தோய் போற்றி
47 ஓம் காமகோடி ரூபனே போற்றி
48 ஓம் காமம் அழிப்பவனே போற்றி
49 ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
50 ஓம் காலத்தின் வடிவே போற்றி

51 ஓம் காசி முக்தி நாமா போற்றி
52 ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
53 ஓம் கோசலை மைந்தா போற்றி
54 ஓம் கோதண்ட பாணியே போற்றி
55 ஓம் சங்கடம் தீர்க்கும்சத்குருவே போற்றி
56 ஓம் சத்ய விக்ரமன் போற்றி
57 ஓம் சரணாகத வத்சலா போற்றி
58 ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி
59 ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி
60 ஓம் சோலை அழகனே போற்றி
61 ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி
62 ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
63 ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி
64 ஓம் தியாகமூர்த்தியே போற்றி
65 ஓம் நிலையானவனே போற்றி

66 ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
67 ஓம் நீலமேக சியாமளனே போற்றி
68 ஓம் பங்கஜகண்ணனே போற்றி
69 ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி
70 ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி
71 ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி
72 ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி
73 ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
74 ஓம் பரதனின் அண்ணனே போற்றி
75 ஓம் பாதுகை தந்தாய் போற்றி

76 ஓம் பிறவி அறுப்பாய் போற்றி
77 ஓம் மாசிலா மணியே போற்றி
78 ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
79 ஓம் மாதவச்செல்வமே போற்றி
80 ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி
81 ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி
82 ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி
83 ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
84 ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி
85 ஓம் ரகு வம்ச நாயகா போற்றி
86 ஓம் லவகுசர் தந்தையே போற்றி
87 ஓம் வல்லமை கொண்டாய் போற்றி
88 ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி
89 ஓம் வானரர் க்கு அருளாய் போற்றி
90 ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி

91 ஓம் விஷயம் கடந்தவனே போற்றி
92 ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி
93 ஓம் விஜயராகவனே போற்றி
94 ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி
95 ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி
96 ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
97 ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி
98 ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி
99 ஓம் வேத முதல்வா போற்றி
100 ஓம் வேந்தர் வேந்தா போற்றி

101 ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
102 ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி
103 ஓம் வேதாந்த சாரமே போற்றி
104 ஓம் வைகுண்ட வாசா போற்றி
105 ஓம் வைதேகி மணாளா போற்றி
106 ஓம் வையகப் பிரபுவே போற்றி
107 ஓம் வையகத்தை வாழவைப்பாய் போற்றி
108 ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஸ்ரீ ராம நவமி

கிருஷ்ணன் 108 போற்றி

இந்த ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு பூக்கள் சாற்றி இந்த போற்றி துதியை படிப்பது நல்லது. இந்த போற்றி துதியை படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Rama
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    2 days ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    2 days ago

    Today rasi palan 24/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை சித்திரை – 11

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _ _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 11* *ஏப்ரல்… Read More

    18 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    6 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    6 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago